பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

உந்தன் காவிய மேடையிலே நான் கவிதைகள் எழுதுகிறேன்...

மீண்டும் இனிமையான இசையில் இணையும் இரண்டு அழகான குரல்கள்.   நல்ல கவிதையாய் வருகிறது

திரைப் படம்: முறைப் பொண்ணு
இசை: M S விஸ்வனாதன்
குரல்கள்: ஜெயசந்திரன், வாணி ஜெயராம்
நடிப்பு: விஜய குமார், K R விஜயா
இயக்கம்: ராஜா கிருஷ்ணமூர்த்தி

Music podcasts - Share Audio -

உந்தன் காவிய மேடையிலே நான் கவிதைகள் எழுதுகிறேன்...

உந்தன் காவிய மேடையிலே நான் கவிதைகள் எழுதுகிறேன்...

அந்த காமனின் பூஜையிலே நான் மோகனம் பாடுகிறேன்...

பால் மொழி பனி மொழியாலே தினம் பேசிடும் பைங்கிளி போலே...

ஒரு நால்வகை தேரினில் ஏறி நான் நாடி வந்தேன் உனைத் தேடி...

இரு வேல் விழி மீன் விழியாலே நீ ஏவிய பூங்கணை கோடி...

ஒரு மாணிக்க பூங்கொடி தேடி நாம் மயங்கிடுவோம் விளையாடி...

உந்தன் காவிய மேடையிலே நான் கவிதைகள் எழுதுகிறேன்...

அந்த காமனின் பூஜையிலே நான் மோகனம் பாடுகிறேன்...

உந்தன் காவிய மேடையிலே நான் கவிதைகள் எழுதுகிறேன்...

ஆறனெ ஓடிடும் வெள்ளம் அதில் ஆயிரம் பேசிடும் உள்ளம்...

குயில் ஊர்வலம் போகின்ற நேரம் இதழ் ஓரமெல்லாம் தமிழ்ச் சாரம்...

என் தாய் மொழி என்பது நாணம் நீ தந்ததுதான் புது கானம்...

இனி வாய் மொழி ஏன் இன்னும் வேனும் உன் வாலிப பார்வைகள் போதும்...

மாங்கனிச் சாரொடுத் தேனும் தரும் மந்திரம் உன்னிடம் தோன்றும்...

ஏங்கிய காலங்கள் போக நாம் இணைந்திருபோம் சுகமாக...

கலை மானிடம் வாங்கிய சாயல் அதில் காண்பது மரகத வாசல்...

என் காணிக்கையாய் வந்த மாது என்னை கலந்திருந்தால் இணையேது...

உந்தன் காவிய மேடையிலே நான் கவிதைகள் எழுதுகிறேன்...

அந்த காமனின் பூஜையிலே நான் மோகனம் பாடுகிறேன்...

உந்தன் காவிய மேடையிலே நான் கவிதைகள் எழுதுகிறேன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக