பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

முத்து போலே மஞ்சள் கொத்து போலே முழு நிலவே நீ பிறந்தாய்

கணீர் குரலோன் திரு சீர்காழி S கோவிந்தராஜன் சூலமங்கலத்துடன் இணைந்து புரட்சித் தலைவருக்காக ஒரு தாலாட்டு பாடி இருக்கிறார். என்னமாக கவிதை புனைந்திருக்கிறார் கவிஞர்? ஈடான இசையமைப்பு.


திரைப் படம்: சபாஷ் மாப்பிள்ளை (1961)
இசை: K V மகாதேவன்
நடிப்பு:  M G R, மாலினி
இயக்கம்:  S ராகவன்
பாடல்: மருதகாசி



http://www.divshare.com/download/15784139-bb5





முத்து போலே மஞ்சள் கொத்து போலே
முத்து போலே மஞ்சள் கொத்து போலே
முழு நிலவே நீ பிறந்தாய் எங்கள் வீட்டிலே
முழு நிலவே நீ பிறந்தாய் எங்கள் வீட்டிலே
முத்து போலே மஞ்சள் கொத்து போலே

கஷ்டம் தீர்ந்தது உன்னாலே கவலை ஓய்ந்தது
கண்மணி உன் தந்தை வாழ்வில் இன்பம் சேர்ந்தது
கஷ்டம் தீர்ந்தது உன்னாலே கவலை ஓய்ந்தது
கண்மணி உன் தந்தை வாழ்வில் இன்பம் சேர்ந்தது

தொட்டதெல்லாம் துலங்கிடும் வேளை வந்தது
தொட்டதெல்லாம் துலங்கிடும் வேளை வந்தது
உனை பெற்ற அன்னை பெருமைக் கொள்ளும் நிலையை தந்தது

முத்து போலே மஞ்சள் கொத்து போலே
முழு நிலவே
முழு நிலவே நீ பிறந்தாய் எங்கள் வீட்டிலே
முத்து போலே மஞ்சள் கொத்து போலே

கட்டித் தங்கமே என் ஆசை கனவு யாவுமே
கனிந்து பிள்ளை உருவமாக வந்த செல்வமே
கட்டித் தங்கமே என் ஆசை கனவு யாவுமே
கனிந்து பிள்ளை உருவமாக வந்த செல்வமே
கண்ணைக் காக்கும் இமையை போல் உன்னை வாழ்விலே
கண்ணைக் காக்கும் இமையை போல் உன்னை வாழ்விலே
காலமெல்லாம் காத்திருந்து மகிழுவோமடா

முத்து போலே மஞ்சள் கொத்து போலே
முழு நிலவே நீ பிறந்தாய் எங்கள் வீட்டிலே
முத்து போலே மஞ்சள் கொத்து போலே

1 கருத்து:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

முத்து போலே மஞ்சள் கொத்து போலே
முழு நிலவே நீ பிறந்தாய் எங்கள் வீட்டிலே
முத்து போலே மஞ்சள் கொத்து போலே

இனிக்கும் பிள்ளைக்கனி அமுது..

கருத்துரையிடுக