பின்பற்றுபவர்கள்

திங்கள், 19 டிசம்பர், 2011

மாணிக்கத் தேரில் மரகதக் கலசம் மின்னுவதென்ன என்ன

இனிமையான இசையில் புரட்சி தலைவரின் பல பாடல்களில் ஒன்று.

திரைப் படம்: தேடி வந்த மாப்பிள்ளை (1970)
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: வாலி
பாடியவர்கள்: T M S, P சுசீலா
இயக்கம்: B R பந்துலு
நடிப்பு: எம் ஜி யார், ஜெயலலிதா


ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
மாணிக்கத் தேரில் மரகதக் கலசம்
மின்னுவதென்ன  என்ன
மன்னன் முகம் கனவில் வந்தது
மஞ்சள் நதி உடலில் வந்தது

மாணிக்கத் தேரில் மரகதக் கலசம்
மின்னுவதென்ன  என்ன
மன்னன் முகம் கனவில் வந்தது
மஞ்சள் நதி உடலில் வந்தது

ராணி உந்தன் மேனி என்ன
ராஜவீதி தோற்றம்தானோ
ராணி உந்தன் மேனி என்ன
ராஜவீதி தோற்றம்தானோ
கேள்வி கேட்ட மன்னன் மேனி
தேவன் கோவில் தோற்றம்தானோ
கேள்வி கேட்ட மன்னன் மேனி
தேவன் கோவில் தோற்றம்தானோ

மாணிக்கத் தேரில் மரகதக் கலசம்
மின்னுவதென்ன
என்ன
மன்னன் முகம் கனவில் வந்தது
மஞ்சள் நதி உடலில் வந்தது

வெண்பட்டு மேனியில் கண்படும் வேளையில்
மூடுது மேலாடை
கண்படும் வேளையில் கைபடுமோ என்று
கலங்குது நூலாடை
இடை படும் பாடோ சதிராட்டம்
இலைகளில் ஆடும் கனியாட்டம்
கண்ணோட்டம்
என் தோட்டம்

மாணிக்கத் தேரில் மரகதக் கலசம்
மின்னுவதென்ன  என்ன
மன்னன் முகம் கனவில் வந்தது
மஞ்சள் நதி உடலில் வந்தது

தென்மலை மேகங்கள் பொன்வலை போட்டன
கூந்தலில் நீராட
மின்னலில் மேனியும் பின்னலில் கூந்தலும்
மிதப்பது யாராட
புது மழை போலே நீரோட
அதிசய நதியில் நானாட
நீ ஆட
ஆஹா தேனோட

மாணிக்கத் தேரில் மரகதக் கலசம்
மின்னுவதென்ன
என்ன
மன்னன் முகம் கனவில் வந்தது
மஞ்சள் நதி உடலில் வந்தது
ஹோ ஹோ ஹோ ஹோ
ஆ ஆ ஆ ஆ
ஹோ ஹோ ஹோ

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை!
பகிர்விற்கு நன்றி நண்பரே!

கருத்துரையிடுக