பின்பற்றுபவர்கள்

புதன், 15 பிப்ரவரி, 2012

தை மாத மேகம் அது தரையில் ஆடுது


ஒரு பாடல் என்பது எவ்வளவு தூரம் மனதை சாந்தப் படுத்த முடியும் என்பதற்கு இந்தப் பாடல் ஒரு நல்ல உதாரணம். பாடலும் குரலும் இசையும் அற்புதம் என சொல்லலாம்.

திரைப் படம்: குழந்தைக்காக (1969,)
பாடியவர்: சுசீலா
இசை: எம்.எஸ்.விஸ்வனாதன்
நடிகை: பத்மினி, மேஜர் சுந்தரராஜன்




http://www.divshare.com/download/16741550-43e



http://www.divshare.com/download/16795352-958

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
தை மாத மேகம்
அது தரையில் ஆடுது
தை மாத மேகம்
அது தரையில் ஆடுது
தை மாத மேகம்
அது தரையில் ஆடுது
அது தேடும் அந்த வானில் வெண்ணிலவே பாடுது
நிலவே பாடுது

முத்து ரதம் ஏறும் நிலவுக்கு நாங்கள்
கொட்டி வைத்த வைரம் நட்சத்திரமாகும்
பூமாலை வெண்மேகமே

தை மாத மேகம்
அது தரையில் ஆடுது

இரவினில் கடவுள் ஏற்றிய விளக்கு
எல்லோர்க்கும் குல விளக்கு
இரவினில் கடவுள் ஏற்றிய விளக்கு
எல்லோர்க்கும் குல விளக்கு
உயரத்தில் இருந்தே உலகத்தைக் காக்கும்
கல்யாணத் திருவிளக்கு
அழுகின்ற குழந்தை காணும் கண் காட்சி
அம்மா வெண்ணிலவில் அரசாட்சி
குற்றம் புரிவோரை கண்டு கொள்ளும் சாட்சி
நல்லோர்கள் நெஞ்சில் உள்ள மனசாட்சி

தை மாத மேகம்
அது தரையில் ஆடுது


நிலவுக்கு தீமை நினைப்பவரில்லை
குழந்தைக்கு நினைப்பாரோ தீமை
குழந்தைக்கு நினைப்பாரோ
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்
என்பதை மறப்பாரோ


பாலுக்கு வெண்மை படைத்தவன் எவனோ
பாப்பாவைப் படைத்தவன் அவன் தானே
பாப்பாவைப் படைத்த கைகளினாலே
பால் போன்ற நிலவைப் படைத்தானே

முத்து ரதம் ஏறும் நிலவுக்கு நாங்கள்
கொட்டி வைத்த வைரம் நட்சத்திரமாகும்
பூமாலை வெண்மேகமே

தை மாத மேகம்
அது தரையில் ஆடுது
அது தேடும் அந்த வானில் வெண்ணிலவே பாடுது
நிலவே பாடுது
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

//ஒரு பாடல் என்பது எவ்வளவு தூரம் மனதை சாந்தப் படுத்த முடியும் என்பதற்கு இந்தப் பாடல் ஒரு நல்ல உதாரணம். பாடலும் குரலும் இசையும் அற்புதம் என சொல்லலாம்.//

முற்றிலும் உண்மை சார்.

கருத்துரையிடுக