பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

புன்னகையில் ஒரு பொருள் வந்தது (Punnagaiyil oru porul)

 டி எம் எஸின் கம்பீரமான, இனிமையான குரலில் அழகான  கவிதை.
என்னதான் அசோகன் காதலில் பாடினாலும் வில்லனாகத்தான் பார்க்கமுடிகிறது. இதிலும் அவர் வில்லன்தான்.
ஆனால் அவர் படங்களில் அவர் பாடியிருக்கும் அல்லது வாயசைத்திருக்கும் பாடல்கள் அனைத்தும் எப்படியோ இனிமையான பாடல்களாகவே அமைத்துவிட்டது குறிப்பிடத் தக்கது.


திரைப் படம்: பவானி (1967)

நடிப்பு: ஜெய்ஷங்கர், விஜயலக்ஷ்மி, விஜயகுமாரி, அசோகன்
இசை: M S விஸ்வனாதன்
இயக்கம், தயாரிப்பு: K ஷங்கர்










புன்னகையில் ஒரு பொருள் வந்தது

பூ முகத்தில் தங்க நிறம் வந்தது

புன்னகையில் ஒரு பொருள் வந்தது

பூ முகத்தில் தங்க நிறம் வந்தது

கன்னியை போல் புது கனி வந்தது

கண்களிலே நானம் ஏன் வந்தது

புன்னகையில் ஒரு பொருள் வந்தது

பூ முகத்தில் தங்க நிறம் வந்தது


பொட்டு வைத்தாள் அவள் முகத்திலே

புள்ளி வைத்தாள் எந்தன் மனத்திலே

கட்டி வைத்தாள் என்னை இடையிலே

கண்ணமிட்டாள் அன்ன நடையிலே


ஹோ ஹோ ஹோ ஹோ


புன்னகையில் ஒரு பொருள் வந்தது

பூ முகத்தில் தங்க நிறம் வந்தது

கன்னியை போல் புது கனி வந்தது

கண்களிலே நானம் ஏன் வந்தது


வஞ்சி என்றால் என்னை வஞ்சிப்பதோ

வந்த பின்னே இன்னும் சிந்திப்பதோ

கொஞ்ச வந்தால் என்ன குறையுமோ

கோவைப் பழம் நிறம் மறையுமோ


ஹோ ஹோ ஹோ ஹோ


புன்னகையில் ஒரு பொருள் வந்தது

பூ முகத்தில் தங்க நிறம் வந்தது



கண்ணவனே அவன் கணவனே

காதலுக்கே அவன் தலைவனே

வண்ண முகம் என்று அசையுமோ

மாலையிட்டால் அது மலருமோ


ஹோ ஹோ ஹோ ஹோ


புன்னகையில் ஒரு பொருள் வந்தது

பூ முகத்தில் தங்க நிறம் வந்தது

கன்னியை போல் புது கனி வந்தது

கண்களிலே நானம் ஏன் வந்தது

புன்னகையில் ஒரு பொருள் வந்தது

பூ முகத்தில் தங்க நிறம் வந்தது

1 கருத்து:

ஸ்ரீராம். சொன்னது…

பிடித்த பாடல்கள் லிஸ்ட்டில் இதுவும் ஒன்று.

கருத்துரையிடுக