பின்பற்றுபவர்கள்

புதன், 28 ஜனவரி, 2015

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ...Pennalla pennalla oothaappoo..

வைரமுத்துவின் பாடல்களில் வைரம் போல ஜொலிக்கும் ஒரு பாடல். கண்ணதாசன்தான் இது  போல எழுதியிருக்கிறார். அனுபவித்துப் பாடியிருப்பார் எஸ். பி. பி.

திரைப் படம்: உழவன்(1993)
இயக்கம்:கதிர்
நடிப்பு: பிரபு, பானுப்ரியா, ரம்பா
பாடியவர்: எஸ் பி பி.
பாடல்:வைரமுத்து
இசை:A R ரஹ்மான்பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ
சிரிப்பு மல்லிகைபூ

சிறு கை வளை கொஞ்சிடும் கொய்யாப்பூ
அவள் கை விரல் ஒவ்வொன்றும் பன்னீர் பூ
மை விழி ஜாடைகள் முல்லை பூ
மணக்கும் சந்தன பூ

சித்திர மேனி தாழம்பூ
சேலை அணியும் ஜாதிப்பூ
சிற்றிடை மீது வாழைப்பூ
ஜொலிக்கும் சென்பகப்பூ

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ
சிரிப்பு மல்லிகைபூ

தென்றலை போல நடப்பவள்
எனை தழுவ காத்து கிடப்பவள்
செந்தமிழ் நாட்டு திருமகள்
எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள்
சிந்தையில் தாவும் பூங்கிளி
அவள் சொல்லிடும் வார்த்தை தேன் துளி
அஞ்சுகம் போல இருப்பவள்
கொட்டும் அருவி போல சிரிப்பவள்
மெல்லிய தாமரை காலெடுத்து
நடையை பழகும் பூந்தேரு
மெட்டியை காலில் நான் மாட்ட
மயங்கும் பூங்கொடி

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ
சிரிப்பு மல்லிகைபூ

சித்திரை மாத நிலவொளி
அவள் சில்லென தீண்டும் பனித்துளி
கொஞ்சிடும் பாத கொலுசுகள்
அவை கொட்டிடும் காதல் முரசுகள்
பழத்தை போல இருப்பவள்
வெல்ல பாகை போல இனிப்பவள்
சின்ன மைவிழி மெல்ல திறப்பவள்
அதில் மன்மத ராகம் படிப்பவள்
உச்சியில் வாசனை பூ முடித்து
நடையை பழகும் பூந்தோட்டம்
மெத்தையில் நானும் சீராட்ட
பிறந்த மோதரம்

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ
சிரிப்பு மல்லிகைபூ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக