பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 2 ஜூன், 2015

எனைத் தேடும் மேகம்...enai thedum megam...

கண்ணோடு கண் படத்தில் வரும் இந்தப் பாடலை வாணிஜெயராமும் பாலுவும் அற்புதமாகப் பாடியிருக்கிறார்கள். ரதியே என்று பாலு முடித்ததும் வாணிஜெயராம் 'ஆஆஆஆஆ' என்று செய்யும் ஆலாபனை நம்மைப் பரவசப்படுத்துகிறது என்றால் வாணி அழகே என்று முடித்ததும் பாலு செய்யும் ஆலாபனை நம்மை மேகங்களில் சஞ்சரிக்க வைக்கிறது.
நன்றி : paadum nila balu.blogspot

திரைப்படம்: கண்ணோடு கண் (1983)
இயக்கம்: கிருஷ்ணா
பாடல்: வைரமுத்து ??? ?வாலி??
நடிப்பு: ரவிக் குமார், சுலக்க்ஷ்னா
இசை:  சங்கர் கணேஷ்

எனைத் தேடும் மேகம் சபை வந்து சேரும்
செவியில் விழுமோ ஊமையின் ராகம்
எனைத் தேடும் மேகம் சபை வந்து சேரும்
செவியில் விழுமோ ஊமையின் ராகம்
எதிர் வந்த போதும் திரை வந்து சேரும்
எதிர் வந்த போதும் திரை வந்து சேரும் - ரதியே

எனைத் தேடும் மேகம் சபை வந்து சேரும்
செவியில் விழுமோ ஊமையின் ராகம்
புதுராகம் ஊறும் சிறைதன்னை மீறும் 
புதுராகம் ஊறும் சிறைதன்னை மீறும் - அழகே

எனைத் தேடும் மேகம் சபை வந்து சேரும்
செவியில் விழுமோ ஊமையின் ராகம்

அணியாத மாலை அழுகின்ற வேளை 
கண்ணீரை அடைகாக்கும் ஏழை
அணியாத மாலை அழுகின்ற வேளை 
கண்ணீரை அடைகாக்கும் ஏழை

இங்கே எல்லாம் வாழும் கண்ணா விழியில் மழை
இங்கே எல்லாம் வாழும் கண்ணா விழியில் மழை
கருகாதே கலங்காதே 
இது முள்ளில் செய்த காதல் பாதை

எனைத் தேடும் மேகம் சபை வந்து சேரும்
செவியில் விழுமோ ஊமையின் ராகம்
எதிர் வந்த போதும் திரை வந்து சேரும்
எதிர் வந்த போதும் திரை வந்து சேரும் - ரதியே
எனைத் தேடும் மேகம் சபை வந்து சேரும்
செவியில் விழுமோ ஊமையின் ராகம்

நிஜமான நேசம் இதிலென்ன பாவம் 
தடைபோடும் பணக்கார சாபம்
நிஜமான நேசம் இதிலென்ன பாவம் 
தடைபோடும் பணக்கார சாபம்

காதல் ஜோடி காற்றில் என்ன அணைந்தா விடும்
காதல் ஜோடி காற்றில் என்ன அணைந்தா விடும்
விழி ஓரம் சுடும் ஈரம் எனை செய்து செய்யும் காதல் சோகம்

எனைத் தேடும் மேகம் சபை வந்து சேரும்
செவியில் விழுமோ ஊமையின் ராகம்
புதுராகம் ஊறும் சிறைதன்னை மீறும் 
புதுராகம் ஊறும் சிறைதன்னை மீறும் - அழகே

எனைத் தேடும் மேகம் சபை வந்து சேரும்
செவியில் விழுமோ ஊமையின் ராகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக