பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 22 டிசம்பர், 2015

கூந்தலிலே மேகம் வந்து குடி புகுந்தாளோ கவியெழுத


பாடல் முடியும் போது நமக்கும் இரைக்கிறது. K.J.ஜேசுதாஸ், சரியான குரல் தேர்வு. S.P.ஷைலஜாவும் ரொம்ப சிரமப் பட்டு  ஒத்துழைத்துள்ளார். அருமையாக இசையமைத்துள்ள பாடல். ஆனாலும் கே வி மகாதேவனின் திறமையில் ஏதோ ஒன்று மிஸ்ஸிங் என்றே தோன்றுகிறது...



படம்: பால நாகம்மா
பாடியவர்கள்: K.J.ஜேசுதாஸ், S.P.ஷைலஜா
இசை: இளையராஜா
நடிப்பு: சரத் பாபு, ஸ்ரீதேவி.
இயக்கம்: கே ஷங்கர்








கூந்தலிலே மேகம் வந்து 
குடி புகுந்தாளோ கவியெழுத
கூந்தலிலே மேகம் வந்து 
குடி புகுந்தாளோ கவியெழுத
குறுநகை அமைத்தது இலக்கிய மேடை
கருவிழி வரைந்தது மன்மத ஜாடை
கூந்தலிலே மேகம் வந்து 
குடி புகுந்தாளோ கவியெழுத

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

செவ்வாழைக் கால்கள் 
சிங்கார தூண்கள்
செவ்வாழைக் கால்கள் 
சிங்கார தூண்கள்
நடந்தால் இடையொரு நடனம்
நடந்தால் இடையொரு நடனம்
மேல்பாதிதனை பார்க்க ஒரு நூறு நாளாகும்
முடியலங்காரம் அடியை அளந்துவரும் கொடியென ஆடும்

கூந்தலிலே மேகம் வந்து 
குடி புகுந்தாளோ கவியெழுத

தம்தனம்தனம்தனம் தம்தனம்தனம்தனம்
தம்தம்தனம் தனம்தனம் தம்தனம்தனம்தனம்
தம்தம்தம்தனம் தம்தம்தம்தனம் தம்தம்தம்
தனம்தம்தம்தம்தனம்

தங்கமேனி சிற்பசித்திரம்
ஆ ஆ ஆ
தங்கமேனி சிற்பசித்திரம் 
தத்தை பேச்சு முத்து ரத்தினம்

தம்த னம்தனம் தம்த னம்தனம்

தங்கமேனி சிற்பசித்திரம் 
தத்தை பேச்சு முத்து ரத்தினம்
அங்கமொன்று காதல் மண்டபம் 
அங்கு பேசும் இன்பமந்திரம்

தம்த னம்தனம் தம்த னம்தனம்

அங்கமொன்று காதல் மண்டபம் 
அங்கு பேசும் இன்பமந்திரம்
கோடி மலரில் இவள் குமுதம்
தன னன
சுவைகூடும் நகையில் இவள் அமுதம்
தன னன னன
கோடி மலரில் இவள் குமுதம்
தன னன
சுவைகூடும் நகையில் இவள் அமுதம்
தன னன னன
கலசம் குலுங்கும் இளமயில் கவிஞன் மயங்கும்
கலைமயில் வீணைமேனிதனில் பின்குடங்கள் என
அசைந்து வரும் அணைக்க வரும் புது நிலவோ

கூந்தலிலே மேகம் வந்து 
குடி புகுந்தாளோ கவியெழுத
குறுநகை அமைத்தது இலக்கிய மேடை
கருவிழி வரைந்தது மன்மத ஜாடை

கூந்தலிலே மேகம் வந்து 
குடி புகுந்தாளோ கவியெழுத


3 கருத்துகள்:

NAGARAJAN சொன்னது…

பதிவில் கே வி மகாதேவன் என்று உள்ளதே ? இசை இளையராஜா. பாடல் கண்ணதாசன்

NAGARAJAN சொன்னது…

படம் வெளிவந்த ஆண்டு 1981

Unknown சொன்னது…

நன்றி நாகராஜன் சார், அது, எனது கருத்தில் இளையராஜா இசைக்கும் கே வி மகாதேவன் இசைக்கும் இடையில் ஏதோ ஒன்று மிஸ்ஸிங் என்று போட்டிருக்கிறேன். அவரது இசையில் (கே வி மகாதேவன்) ஒரு ஆத்மார்த்த ஆழ் மனதை தொடும் ஒரு மையம் எப்போது இதுக்கும். அதை சொன்னேன் சார்.

கருத்துரையிடுக