பின்பற்றுபவர்கள்

சனி, 14 ஜனவரி, 2017

நிலவில்லாமல் வானிருக்கும் மலரில்லாமல் தேனிருக்கும்

இந்த படத்துக்கு இசை இப்ராஹீம் என்பவர் என்பது கவனிக்கப்பட வேண்டியது. இனிமையாகத்தான் உள்ளது. மலை விழுங்கி இசையமைப்பாளர்கள் அப்போது இருந்த போது இவர் ஜொலிக்க முடியாதது  புதிதல்ல.

திரைப்படம்: வழிகாட்டி (1965)
இயக்கம்: விபரங்கள் இல்லை.
நடிப்பு: எஸ் எஸ் ஆர், விஜய குமாரி
இசை: இப்ராஹீம்
பாடல்: வாலி
பாடியவர்கள்: டி எம் எஸ், சுசீலா






Music podcasts - Listen Audio -










நிலவில்லாமல் வானிருக்கும்
நீயில்லாமல் நானில்லை –உன்
நினைவில்லாமல் வேறில்லை
நிலவில்லாமல் வானிருக்கும்
மலரில்லாமல் தேனிருக்கும்

முன்னும் பின்னும் நடை
பின்னி பின்னி வரும் பாவையே
காதல் தோற்றம் தோற்றம் என்ன
சொல்வேன் என்னை மயக்குதே

அழகே அருகே வருவாயே
இன்னுமா
ஹும்
வெட்கமா
ஹும்
நிலவில்லாமல் வானிருக்கும்
மலரில்லாமல் தேனிருக்கும்

அள்ளி அள்ளி செல்ல
மெல்ல மெல்ல வந்த மன்னவா
சுகம் தேடி தேடி வரும் அல்லவா
இன்னும் சொல்லவா

அருகே அருகே வருவேனே
அச்சமா
ஹும் 
இன்னுமா
ஹும்
நிலவில்லாமல் வானிருக்கும்
மலரில்லாமல் தேனிருக்கும்

தங்க திருமுகம் தேனாறோ
நீ தரையில் தவழும் பூந்தேரோ
மன்னவன் என்பதும் நீதானோ
ஒரு மாளிகை என்பது மனம் தானோ

ஏழை அங்கே வருவேனே
என்னை உனக்கு தருவேனே
நிலவில்லாமல் வானிருக்கும்

மலரில்லாமல் தேனிருக்கும்

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வரிகளும் இனிமை...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல பாடல். நன்றி.

அபயாஅருணா சொன்னது…

கேட்ட ஞாபகம் இருக்கு நன்றி

கருத்துரையிடுக