பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 4 மார்ச், 2011

ஓராயிரம் பார்வையிலே,,உன் பார்வையை நான் அறிவேன்..

வசனகர்த்தா: A L நாராயணன்


நடிப்பு: S A அசோகன், சாவித்திரி, மணிமாலா

தயாரிப்பு: R சுந்தரம்

இசை: S வேதா

பாடல் வரிகளை எழுதி வழங்கிய திரு தமிழன்பன் அவர்களுக்கு நன்றி


வேற்று மொழி படப் பாடலின் இசையென்றாலும் இசை இசைதான். இனிமையானது.



http://www.divshare.com/download/14225181-808


நூறுமுறை பிறந்தாலும்

நூறுமுறை இறந்தாலும்

உனைப் பிரிந்து வெகுதூரம் - நான்

ஒருநாளும் போவதில்லை

உலகத்தின் கண்களிலே

உருவங்கள் மறைந்தாலும்

ஒன்றான உள்ளங்கள்

ஒருநாளும் மறைவதில்லை!



ஓராயிரம் பார்வையிலே

உன் பார்வையை நான் அறிவேன்

உன் காலடி ஓசையிலே

உன் காதலை நான் அறிவேன்



ஓராயிரம் பார்வையிலே

உன் பார்வையை நான் அறிவேன்



இந்த மானிடக் காதலெல்லாம்

ஒரு மரணத்தில் மாறி விடும்

அந்த மலர்களின் வாசமெல்லாம்

ஒரு மாலைக்குள் வாடி விடும்

நம் காதலின் தீபம் மட்டும்

எந்த நாளிலும் கூட வரும்



ஓராயிரம் பார்வையிலே

உன் பார்வையை நான் அறிவேன்

உன் காலடி ஓசையிலே

உன் காதலை நான் அறிவேன்

ஓராயிரம் பார்வையிலே

உன் பார்வையை நான் அறிவேன்



இந்த காற்றினில் நான் கலந்தேன்

உன் கண்களை தழுவுகின்றேன்

இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்

உன் ஆடையில் ஆடுகின்றேன்

நான் போகின்ற பாதையெல்லாம்

உன் பூமுகம் காணுகின்றேன்



ஓராயிரம் பார்வையிலே

உன் பார்வையை நான் அறிவேன்

உன் காலடி ஓசையிலே

உன் காதலை நான் அறிவேன்

ஓராயிரம் பார்வையிலே

உன் பார்வையை நான் அறிவேன்

2 கருத்துகள்:

தமிழன்பன் சொன்னது…

பாடலைத் தரவேற்றி உதவியதற்கு மிக்க நன்றி.
இனிமேலும் "திரு" வைத் தவிர்த்து பெயரைக் குறிப்பிடுவது வரவேற்கத்தக்கது.

kaviri சொன்னது…

ஆழமான காதலை அழுத்தமாகச் சொன்னவர் கண்ணதாசன்!
நீண்ட காலமாக நினைவுக்கோப்பையில் நின்றிருக்கும் பாடலை நிதர்சனமாய் தந்தவரே.. மானிட இனம் மண்ணில் வாழும்வரை நிலைத்திருக்கும் பாடல் அன்றோ? இதனை எழுத்துருவில் காண துணைநின்ற தங்களை எத்தனைப் பாராட்டினாலும் தகும்!
காவிரிமைந்தன் kmaindhan@gmail.com

கருத்துரையிடுக