பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 6 மார்ச், 2011

இதழ் மொட்டு விரிந்திட முத்து விளைந்திடும் சித்திர பெண் பாவை..

என்றும் இளமை மாறா பாடல். அழகாக நீரோட்டமாக அமைந்த கவிதை வரிகள். காதலியின் ஊடலும்  நாயகனின் சமாதானமும்   இலக்கியச் சுவையில்  வழங்கியிருக்கிறார்கள்


திரைப் படம்: பந்த பாசம் (1962)
நடிப்பு: சிவாஜி, சாவித்திரி, தேவிகா
இசை: விஸ்வனாதன் ராமமூர்த்தி
இயக்கம்: பீம்சிங்கு
பாடல்: வாலி
பாடியவர்கள்: P B ஸ்ரீனிவாஸ்,  P சுசீலா





http://www.divshare.com/download/14199890-ad0



இதழ் மொட்டு விரிந்திட முத்து விளைந்திடும் சித்திர பெண் பாவை..

கண் பட்டு மறைந்தெனை விட்டு பறந்திடும் காரணம் தான் யாதோ..

இங்கு கோபமும் வரலாமோ... முகம் குங்கும நிறமாமோ...



என்னை கண்டதும் வந்து குழைந்திட நின்றவர் கவிஞனின் உறவாமோ...

சொன்ன சொல்லை மறந்தவர் என்னை மறந்தவர் யாரென தெரியாதோ..

வரத் தாமதம் எதனாலோ...அது காதலின் குணமாமோ...



இளம் தென்றலில் மணமாவாள்..

அள்ளிக் கொண்டதும் சேயாவாள்...

நான் வந்ததும் பனியாவாள்..

ஏன் இன்றவள் பகையானாள்...



கொடி கண்டதும் கிளையாவார்...

இசை வந்ததும் மொழியாவார்...

மலர் கண்டதும் வண்டாவார்...

கனி கண்டதும் கிளியாவார்..



இளம் மலருக்கு கோபமும் வருமோ...



வரும் வண்டுக்கு இது தெரியாதோ...



அந்த வானுக்கும் நிலவுக்கும் பகையோ...



அதை கண்டது யார் என்ன கதையோ...



அந்த வள்ளுவன் குறள் போலே...அவள் வகைக்கோரு சுவையாவாள்...

தரும் கள்ளினில் மணமாமோ...

என்னை கண்டதும் இளகாதோ...



அவர் கண்களும் சிறையாமோ...அதில் கன்னியர் இரையாமோ...

இழை கல்லிலும் எடுப்பாரோ... அதை பின்னியும் முடிப்பாரோ...



அன்பு தழைக்கிற இடமென்ன மனமோ..



விதை தெளிக்கிற இடமென்ன விழியோ...



நெஞ்சில் நினைத்ததும் இனிப்பது எதுவோ..



கொஞ்சம் நெருங்கிட நெருங்கிட துணிவோ...



இதழ் மொட்டு விரிந்திட முத்து விளைந்திடும் முத்தமிழ் பயிராகும்...

மனம் ஒத்து நடந்தொரு நித்த உளம் தனில் வைத்தது நெறியாகும்...



இளங்காவியம் அரங்கேறும்...



தென்றல் காதினில் சுரம் பாடும்...



ஹா ஹா ஹா ஓ ஓ ஹா ஹா ஹா ஓ ஒ

1 கருத்து:

தமிழன்பன் சொன்னது…

இப் பாடலைப் பாடிய பாடகர், பாடகியின் பெயர்களைக் குறிப்பிட முடியுமா???

கருத்துரையிடுக