ஒரு அரிய S P Bயின் ஆரம்ப காலக் குரலில் நல்லதொரு பாடல்
திரைப் படம்: நான்கு சுவர்கள் (1971)
இசை: M S விஸ்வனாதன்
குரல்கள்: S P B, P சுசீலா
இயக்கம்: K பாலசந்தர்
நடிப்பு: ஜெய்ஷங்கர், வாணிஸ்ரீ
http://www.divshare.com/download/15725591-de8
நினைத்தால் நான் வானம் சென்று
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்
நினைத்தால் நான் வானம் சென்று
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்
மேகம் கொண்டு வீடொன்று
மின்னல் கொண்டு விளக்கொன்று
வின் மீனால் பூவொன்று சீர்க்கொண்டு
உன்னோடு நானும் வருவேன்
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்
நினைத்தால் நான் வானம் சென்று
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்
காமதேனு வந்து
கறந்த பாலைத் தந்து
அருந்தும்போது உன்னை
அணைக்க வேண்டும் கண்ணே
வானவீதி ஓரம்
தெய்வ வீணை நாதம்
கேட்கும்போது மெல்ல
கிள்ள வேண்டும் கன்னம்
நினைத்தால் நான் வானம் சென்று
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்
லா லா லா லா ஆ ஆ ஆ
தேவ மாதர் கூட்டம்
காம தேவன் ஆட்டம்
ஆடும்போது நாமும்
ஆடிப் பார்க்க வேண்டும்
ஆகாய கங்கை
அருகில் இந்த மங்கை
குளிக்கும்போது நானும்
ஒளிந்து பார்க்க வேண்டும்
நினைத்தால் நான் வானம் சென்று
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்
மேகம் கொண்டு வீடொன்று
மின்னல் கொண்டு விளக்கொன்று
வின் மீனால் பூவொன்று சீர்க்கொண்டு
உன்னோடு நானும் வருவேன்
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்
2 கருத்துகள்:
இதுவரை கேட்காத பாடல் ! நன்றி சார் !
அருமையான பாடல் அசோக்! எஸ்.பி.பி. என்றும் ராஜாதான்.
தங்கள் தளத்தை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். சமயமிருப்பின் வந்து பார்த்துக் கருத்திட்டால் மகிழ்வேன். நன்றி!
http://blogintamil.blogspot.in/2012/05/blog-post_05.html
கருத்துரையிடுக