பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 25 மே, 2012

பொன்னெழில் பூத்தது புதுவானில்


கொஞ்சம் கடினமான தமிழில் கவிதையாக பொழிந்திருக்கும் பாடல். கவிஞருக்கு பாட்டெழுதுவதில் துணையாக இருந்த  பஞ்சு அருணாசலம்
அவர்கள் எழுதிய முதல் பாடல் என்கிறார்கள். பாடலில் கவிதை மட்டுமில்லாமல் இசை, குரல்கள் எல்லாமே அருமை.

திரைப் படம்: கலங்கரை விளக்கம் (1965)
நடிப்பு: எம் ஜி யார், சரோஜா தேவி
இயக்கம்: K சங்கர்
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
குரல்கள்: T M S, P சுசீலா




http://www.divshare.com/download/14961649-8ce

சிவகாமீ! சிவகாமீ! சிவகாமீ!

பொன்னெழில் பூத்தது புதுவானில்

வெண் பனி தூவும் நிலவே நில்

பொன்னெழில் பூத்தது புதுவானில்

வெண் பனி தூவும் நிலவே நில்

என் மனத் தோட்டத்து வண்ணப் பறவை

சென்றது எங்கே சொல் சொல் சொல்

பொன்னெழில் பூத்தது புதுவானில்

வெண் பனி  தூவும் நிலவாத்தினில்வே நில்



தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு

எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்

எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்

தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு

எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்

எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்

உன்னிரு கண் பட்டு புண் பட்ட நெஞ்சத்தில்

உன் பட்டு கைப்பட பாடுகிறேன்

பொன்னெழில் பூத்தது புதுவானில்

வெண் பனி  தூவும்  நிலவே நில்



முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை

அள்ளிக் கொடுத்த பொன் மாடமெங்கே

அள்ளிக் கொடுத்த பொன் மாடமெங்கே

முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை

அள்ளிக் கொடுத்த பொன் மாடமெங்கே

அள்ளிக் கொடுத்த பொன் மாடமெங்கே

கிண்ணம் நிரம்பிட செங்கனி சாருண்ண

முன் வந்த செவ்வந்தி மாலை எங்கே



பொன்னெழில் பூத்தது தலைவா வா

வெண்பனி தூவும் இறைவா வா

உன் மனத் தோட்டத்து வண்ணப் பறவை

வந்தது இங்கே வா வா வா

பொன்னெழில் பூத்தது தலைவா வா

வெண்பனி தூவும் இறைவா வா



தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு

வந்தது பொன் வண்டு பாடிக்கொண்டு

வந்தது பொன்வண்டு பாடிக்கொண்டு

தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு

வந்தது பொன் வண்டு பாடிக்கொண்டு

வந்தது பொன்வண்டு பாடிக்கொண்டு

மன்னவன் உள்ளத்து சொந்தம் வந்தாளென்று

சென்றது பூந்தென்றல் ஆடிக்கொண்டு

பொன்னெழில் பூத்தது தலைவா வா

வெண்பனி தூவும் இறைவா வா



என்னுடல் என்பது உன் உடல் என்றபின்

என்னிடம் கோபம் கொள்ளுவதோ

என்னிடம் கோபம் கொள்ளுவதோ

ஒன்றில் ஒன்றானப்பின் தன்னை தந்தானபின்

உன்னிடம் நானென்ன சொல்லுவதோ

பொன்னெழில் பூத்தது தலைவா வா

வெண்பனி தூவும் இறைவா வா

உன் மனத் தோட்டத்து வண்ணப் பறவை

வந்தது இங்கே வா வா வா

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமையான பாடல் ! நன்றி சார் !

கே. பி. ஜனா... சொன்னது…

இசையும் பாடலும் போட்டி போதும் போடும் இனிமையான பாடல்.
//வெண் பனி தூங்கும் நிலவே நில்
என் மனத் தொட்டது வண்ணப் பறவை// என்ற வரிகளில் தூவும், தோட்டத்து என்ற வார்த்தைகள் சற்றே மாறி வந்துள்ளனவே?

கே. பி. ஜனா... சொன்னது…

முன்பு இசைத்தட்டாக கேட்கையில் கேட்டு ரசித்த முழு பி.ஜி.எம்மும் (சரணங்களின் இடையிலான இசையைச் சொல்கிறேன்) இப்போது கேட்கக் கிடைப்பதில்லை. ஆனால் அதில் பெரும் பகுதி உங்கள் பாடலில்!. மிக்க மண்கிழ்ச்சி. நன்றி.

Unknown சொன்னது…

நன்றி. தவறுகள் திருத்தப்பட்டுள்ளன

கருத்துரையிடுக