இனிமையான S ஜானகி அம்மாவின் குரலில் இது தணிக்கையில் வெட்டுபடாத அசல் பாடல்.
திரைப் படம் : திருவிளையாடல்
குரல்கள்:P B S, S.ஜானகி
கவிதை: கண்ணதாசன்
இசை: K V மகாதேவன்
இயக்கம்: A P நாகராஜன்
நடிப்பு: சிவாஜி, சாவித்திரி, முத்துராமன்
http://www.divshare.com/download/18232190-7b6
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
ஆடை பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல்
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
ஆடை பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல்
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
பதி மதுரை வீதியிலே வலம் வரும் தென்றல்
பதி மதுரை வீதியிலே வலம் வரும் தென்றல்
இந்த பாண்டியனார் பைங்கிளியை தீண்டிடும் தென்றல்
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
கார் குழலை நீராட்டி கண்ணிரண்டை தாலாட்டி
கார் குழலை நீராட்டி கண்ணிரண்டை தாலாட்டி
தேனிதழில் முத்தமிட்டு சிரித்திடும் தென்றல்
வண்ண தேகமெங்கும் நீரெடுத்து தெளித்திடும் தென்றல்
தேகமெங்கும் நீரெடுத்து தெளித்திடும் தென்றல்
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
கட்டிலிலே சேர்ந்திருக்கும் காதலர்கள் மேனியிலே
கட்டிலிலே சேர்ந்திருக்கும் காதலர்கள் மேனியிலே
வட்டமிட்டு பாதை தேடி மயங்கிடும் தென்றல்
போக வழியில்லாமல் வந்த வழி சுழன்றிடும் தென்றல்
வழியில்லாமல் வந்த வழி சுழன்றிடும் தென்றல்
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
வான் பறக்கும் கொடியினிலே
மீன் பறக்கும் மதுரையிலே
வான் பறக்கும் கொடியினிலே
மீன் பறக்கும் மதுரையிலே
தான் பறந்து ஆட்சி செய்யும் தளிர் மணி தென்றல்
அது வான் திறந்த போது வந்த வாலிப தென்றல்
வான் திறந்த போது வந்த வாலிப தென்றல்
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
ஆடை பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல்
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
கன்னியர்கள் மேனியிலே கலந்து வரும் வேளையிலும்
கன்னியர்கள் மேனியிலே கலந்து வரும் வேளையிலும்
தன்னுடலைக் காட்டாத தந்திர தென்றல்
ஆளும் தென்னவர்க்கும் அஞ்சாத சாகச தென்றல்
தென்னவர்க்கும் அஞ்சாத சாகச தென்றல்
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
ஆடை பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல்
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
5 கருத்துகள்:
வீசிக் கொண்டேயிருக்கட்டும் தென்றல் என்பது போல கேட்டுக் கொண்டேயிருக்கலாம் இந்தப் பாட்டை! மிகப் பிடித்த பாடல். திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவனின் ஒன் ஆஃப் த பெஸ்ட்.
"அது வான் பிறந்த போது வந்த வாலிபத் தென்றல்..." என்பது சரிதானா? "அது வான் திறந்த.." என்று தான் வரும் என நினைக்கிறேன்.
திருத்ததிற்கு நன்றி. திருத்தப்பட்டது.
ஜீவா அவர்கள் என்னை மன்னிக்க வேண்டும். பாடல் காட்சியில் பார்க்கும் போது ''வான் பிறந்த போது வந்த வாலிப தென்றல்'' என்பதாகத் தான் தேவிகா அவர்களின் உச்சரிப்பு இருக்கிறது. முடிந்தால் பாடல் காட்சியை விரைவில் தரமேற்ற முயற்சிக்கிறேன் அல்லது இங்கே சென்று பார்க்கலாம்.
http://www.youtube.com/watch?v=rA1cuzhcTfQ
அழகிய பாடல் ! நன்றி சார் !
ஆமாம். பார்த்தேன். அப்படித்தான் தெரிகிறது அவரது உச்சரிப்பு. ஆக, காதுக்கு ஒன்றும் கண்ணுக்கு ஒன்றுமாக... நல்ல வினோதம்! நன்றி.
கருத்துரையிடுக