பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 22 ஜூன், 2012

உன் அழகை கண்டுகொண்டால் பெண்களுக்கே ஆசை வரும்

ஒரு அழகானப் பெண்ணை பற்றிய வர்ணனை இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு இந்தப் பாடல் ஒரு அளவுகோல்.
என்ன அழகான பாடல் இது?

திரைப் படம்: பூவும் பொட்டும் (1968)
இசை: R கோவர்த்தன்
குரல்: P B ஸ்ரீனிவாஸ்
இயக்கம்: தாதா மிராஸி
நடிப்பு: A V M ராஜன், பாரதி, முத்துராமன்
  


உன் அழகை கண்டுகொண்டால்
பெண்களுக்கே ஆசை வரும்
பெண்களுக்கே ஆசை வந்தால்
என் நிலைமை என்ன சொல்வேன்

உன் அழகை கண்டுகொண்டால்
பெண்களுக்கே ஆசை வரும்
பெண்களுக்கே ஆசை வந்தால்
என் நிலைமை என்ன சொல்வேன்

நின்றால் கோவில் சிலையழகு
நிமிர்ந்தால் ஆயிரம் கலையழகு

நடந்தால் அன்னத்தின் நடையழகு
நாடகமாடும் இடையழகு

நின்றால் கோவில் சிலையழகு
நிமிர்ந்தால் ஆயிரம் கலையழகு

நடந்தால் அன்னத்தின் நடையழகு
நாடகமாடும் இடையழகு

அழகில் இது புதுவிதமே
இறைவனுக்கே ரகசியமே

இறைவனுக்கே ரகசியம்

உன் அழகை கண்டுகொண்டால்
பெண்களுக்கே ஆசை வரும்
பெண்களுக்கே ஆசை வந்தால்
என் நிலைமை என்ன சொல்வேன்

வசந்தம் வந்தால் கொடிகளிலே
மலரும் மலர்கள் ஆயிரமே
மலரும் மலர்கள் ஆயிரமும்
மங்கையின் மலர் போல் ஆவதில்ல

வசந்தம் வந்தால் கொடிகளிலே
மலரும் மலர்கள் ஆயிரமே
மலரும் மலர்கள் ஆயிரமும்
மங்கையின் மலர் போல் ஆவதில்ல

மலர் பறிக்கும் நேரமிதே
பொழுது சென்றால் வாடிவிடும்

பொழுது சென்றால் வாடிவிடும்

உன் அழகை கண்டுகொண்டால்
பெண்களுக்கே ஆசை வரும்
பெண்களுக்கே ஆசை வந்தால்
என் நிலைமை என்ன சொல்வேன்

3 கருத்துகள்:

ஹாலிவுட்ரசிகன் சொன்னது…

வரிகளை வாசிக்கும்போதே பாடல் மனதில் ஓடுகிறது. அப்பா அடிக்கடி கேட்கும் பாடல். கேட்டுக் கேட்டு அப்படியே மனதில் ஒட்டிவிட்டது. இன்று தான் வீடியோ பார்க்கிறேன். அழகான பாடல். நன்றி.

கே. பி. ஜனா... சொன்னது…

'அன்புள்ள அத்தான் வணக்கம்,' என்ற பாடல் வழியாக கைராசி' என்ற படத்தில் முத்திரை பதித்தவர் கோவர்த்தனம். அடுத்த அவரின் பெரிய ஹிட் 'பட்டணத்தில் பூதம்'
அவரின் மிகச்சிறந்த ஹிட்களில் ஒன்றான இந்தப் பாடல் அந்த வருடத்தில் பெற்ற வரவேற்பு அமோகம்!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இனிமையான பாடலுக்கு நன்றி சார் !

கருத்துரையிடுக