பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 26 ஜூன், 2012

பாட்டு ஒரு பாட்டு பாட்டு ஒரே ஒரு பாட்டு

புரட்சி தலைவர் அவரது ஆஸ்தான கதாநாயகியுடன் இணைந்த பின் அந்த பாடலின் மகிமையே தனிதான். கவிஞர் இந்தப் பாடலில் காதல் படுத்தும் பாட்டை தெளிவாக்கி உள்ளார்.

திரைப் படம்: தாய் சொல்லைத் தட்டாதே (1961)
இசை: K V மகாதேவன்
பாடல்: கண்ணதாசன்
இயக்கம்: M M A சின்னப்ப தேவர்

http://www.divshare.com/download/18478954-a19

ம்ம் ம்ம்ம்ம் ம்ம் ம்ம்ம்ம்ம்ம்

பாட்டு ஒரு பாட்டு
பாட்டு ஒரே ஒரு பாட்டு
பாட்டு ஒரு பாட்டு
பாட்டு ஒரே ஒரு பாட்டு

ஏட்டினிலும் எழுத்தினிலும் ஒரே ஒரு பாட்டு
அதை எழுதும் போது மயக்கம் வரும் ஒரே ஒரு பாட்டு
ஏட்டினிலும் எழுத்தினிலும் ஒரே ஒரு பாட்டு
அதை எழுதும் போது மயக்கம் வரும் ஒரே ஒரு பாட்டு

தோட்டம் தேடி நடக்கச் சொல்லும் ஒரே ஒரு பாட்டு
தோட்டம் தேடி நடக்கச் சொல்லும் ஒரே ஒரு பாட்டு
தூக்கமின்றி அலைய வைக்கும் ஒரே ஒரு பாட்டு

பாட்டு ஒரு பாட்டு
பாட்டு ஒரே ஒரு பாட்டு

தாய் தடுத்தால் கேட்பதில்லை ஒரே ஒரு பாட்டு
பெற்ற தந்தையையும் மதிப்பதில்லை ஒரே ஒரு பாட்டு
தாய் தடுத்தால் கேட்பதில்லை ஒரே ஒரு பாட்டு
பெற்ற தந்தையையும் மதிப்பதில்லை ஒரே ஒரு பாட்டு

பாய் விரித்துப் படுக்கும் போதும் ஒரே ஒரு பாட்டு
பாய் விரித்துப் படுக்கும் போதும் ஒரே ஒரு பாட்டு
பாதியிலே விழிக்கச் சொல்லும் ஒரே ஒரு பாட்டு

பாட்டு ஒரு பாட்டு
பாட்டு ஒரே ஒரு பாட்டு

உறவு பார்த்து வருவதில்லை
உருவம் கண்டு பிறப்பதில்லை
நிலவு மங்கை எழுதி வைத்த பாட்டு
உறவு பார்த்து வருவதில்லை
உருவம் கண்டு பிறப்பதில்லை
நிலவு மங்கை எழுதி வைத்த பாட்டு
நம் இருவருக்கும் தெரிந்ததுதான் காதலென்னும் பாட்டு

பாட்டு ஒரு பாட்டு
பாட்டு ஒரே ஒரு பாட்டு
காதல் பாட்டு ஒரு பாட்டு
பாட்டு ஒரே ஒரு பாட்டு

ம்ம் ம்ம்ம்ம் ம்ம் ம்ம்ம்ம்ம்ம்

2 கருத்துகள்:

கருத்துரையிடுக