பின்பற்றுபவர்கள்

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு

இந்தப் பாடலில் S P B யின் குரலில் உள்ள உயிரோட்டமும், ஏற்ற இறக்கங்களும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்று. திரும்பவும் ஒருவர் இதை பாடுவதென்றால் நிச்சயமாக அது மேடையில் மெல்லிசை கச்சேரியில் பாடும்  பாடல் போலதான் இருக்கும். சிறந்த தமிழ் திரைப் பாடல்களில் தவிர்க்க முடியாத ஒரு பாடல்.
 
திரைப் படம்: தில்லு முல்லு (1981)
பாடியவர்: S P பாலசுப்ரமணியம்
இசை: M S விஸ்வநாதன்
நடிப்பு: ரஜினிகாந்த், மாதவி
பாடல்: கண்ணதாசன் 
இயக்கம்: K பாலசந்தர் 

http://asoktamil.opendrive.com/files/Nl8xNzMyMzgxOF9aclR5aV9iNjA1/Raagangal%2016.mp3






அ  ஹ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா

பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட சுகமானது
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட சுகமானது
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா


கலை மாது தான் மீட்டும் இதமான வீணை
கனிவான ஸ்வரம் பாட பதமானது
கலை மாது தான் மீட்டும் இதமான வீணை
கனிவான ஸ்வரம் பாட பதமானது
அழகான இளம் பெண்ணின் மேனி தான்
கூடஆதார சுதி கொண்ட வீணையம்மா
அழகான இளம் பெண்ணின் மேனி தான்
கூடஆதார சுதி கொண்ட வீணையம்மா

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா

இடையாட வளையாட சலங்கைகள் ஆட
இலையோடு கொடி போல நடமாடினாள்
இடையாட வளையாட சலங்கைகள் ஆட
இலையோடு கொடி போல நடமாடினாள்
உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்
ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மா
உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்
ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மா
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா.
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட சுகமானது
ஆ ஆ ஆ ஆ
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட சுகமானது
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா




2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

//திரும்பவும் ஒருவர் இதை பாடுவதென்றால் நிச்சயமாக அது மேடையில் மெல்லிசை கச்சேரியில் பாடும் பாடல் போலதான் இருக்கும். //

ரொம்ப சரியா சொன்னீங்க சார். தபேலா பிரசாத் ஐயாவின் கைவண்ணம் மிகவும் ரசிக்கும் படியாக இருக்கும். பகிரிவிற்க்கு மிக்க நன்றி.

Raashid Ahamed சொன்னது…

மெல்லிசை மன்னரின் இசையில் உருவான பாடலல்லவா பின் எப்படி இருக்கும்? எஸ்பிபாலா சாருக்கு அற்புதமான பல பாடல்களை வழங்கிய இசை மேதை. தமிழ் திரைப்பட பாடல்களில் தவிர்க்க முடியாத பாடல். ஆயினும் உங்கள் தொகுப்பில் தாமதமாக இடம் பிடித்த பாடல்.

கருத்துரையிடுக