பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 18 நவம்பர், 2014

வருஷம் மாசம் தேதி பார்த்து..varusham maasam thethi parthu

ஏன் சந்தோஷமாக பாடுவதற்கு ஜானகி அம்மாவையும் சோக பாடலுக்கு சுசீலா அம்மாவும் தேர்வு செய்தார்கள் என்பது தெரியவில்லை. எப்படியோ இரு வேறு குரல்களில் இரண்டு அமுதங்கள்.
Decent ஆன காட்சியமைப்பு, நடிப்பு, பாடல் வரிகள் மற்றும் இசையில் மின்னும் ஒரு பாடல்.

திரைப் படம்: மணியோசை (1963)
பாடியவர்: S ஜானகி
அடுத்து சோகமாக பாடியவர்: P சுசீலா
பாடல்: கண்ணதாசன்
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
நடிப்பு: கல்யான் குமார், விஜயகுமாரி
இயக்கம்: P மாதவன்S ஜானகியின் குரலில்:

ஒ ஒ ஒ ஒ ஹோ ஹோ ஹோ ஒ ஒ

வருஷம் மாசம் தேதி பார்த்து
வயசு வந்த பொண்ணைப் பார்த்து
புருஷனாக வருவேனெனு சொன்னாரு
அத்தான்
பூமிக்குள்ளே பெண்ணை தேடி நின்னாரு

அத்தான்
பூமிக்குள்ளே பெண்ணை தேடி நின்னாரு

வருஷம் மாசம் தேதி பார்த்து
வயசு வந்த பொண்ணைப் பார்த்து
புருஷனாக வருவேனெனு சொன்னாரு
அத்தான்
பூமிக்குள்ளே பெண்ணை தேடி நின்னாரு

பருத்திக் காட்டு கழனி மேட்டில்
பாய் விரித்து படுக்கை போட்டு
ஒருத்திக்காக காத்து காத்து நின்னாரு.
அத்தான்
ஓடைக் காத்தை தூது போக சொன்னாரு
அத்தான்
ஓடைக் காத்தை தூது போக சொன்னாரு

வருஷம் மாசம் தேதி பார்த்து
வயசு வந்த பொண்ணைப் பார்த்து
புருஷனாக வருவேனெனு சொன்னாரு
அத்தான்
பூமிக்குள்ளே பெண்ணை தேடி நின்னாரு

ஒ ஒ ஒ ஹோ ஹோ ஹோ ஒ ஒ ஓ

பச்சை வாழைத் தோட்டம் போல
பழுத்து நின்ற முகத்தை பார்த்து


வருஷம் மாசம் தேதி பார்த்து
வயசு வந்த பொண்ணைப் பார்த்து
புருஷனாகி தாலி ஒண்ணு தந்தாரு
அத்தான்
பொண்ணைப் பார்க்கக் கண்ணில்லாமல் வந்தாரு

என் மடியில் தொட்டில் கட்டி
இரவு பகல் பாட்டுப் பாடி
நான் அவரைக் காத்திருப்பேன் கண்ணாக
நாங்கள் நாள் முழுதும் வாழ்ந்திருப்போம் ஒண்ணாக
நாள் முழுதும் வாழ்ந்திருப்போம் ஒண்ணாகP சுசீலாவின் குரலில்:
வருஷம் மாசம் தேதி பார்த்து
வயசு வந்த பொண்ணைப் பார்த்து
புருஷனாகி தாலி ஒண்ணு தந்தாரு
அத்தான்
பொண்ணைப் பார்க்கக் கண்ணில்லாமல் வந்தாரு

வருஷம் மாசம் தேதி பார்த்து
வயசு வந்த பொண்ணைப் பார்த்து
புருஷனாகி தாலி ஒண்ணு தந்தாரு
அத்தான்
பொண்ணைப் பார்க்கக் கண்ணில்லாமல் வந்தாரு

ஊரைக் கூட்டி மேளம் வைத்து
உறவைக் கூட்டி விருந்து வைத்து
ஊர்வலமாய் போவோமின்னு சொன்னாரு
அவர் ஒருவர் மட்டும் தனிமையிலே வந்தாரு
அவர் ஒருவர் மட்டும் தனிமையிலே வந்தாரு

வருஷம் மாசம் தேதி பார்த்து
வயசு வந்த பொண்ணைப் பார்த்து
புருஷனாகி தாலி ஒண்ணு தந்தாரு
அத்தான்
பொண்ணைப் பார்க்கக் கண்ணில்லாமல் வந்தாரு

என் மடியில் தொட்டில் கட்டி
இரவு பகல் பாட்டுப் பாடி
நான் அவரைக் காத்திருப்பேன் கண்ணாக
நாங்கள் நாள் முழுதும் வாழ்ந்திருப்போம் ஒண்ணாக
நாள் முழுதும் வாழ்ந்திருப்போம் ஒண்ணாக

2 கருத்துகள்:

NAGARAJAN சொன்னது…

S ஜானகியுடன் இணைந்து வரும் ஆண் குரல் - MSV .
p மாதவன் இயக்கிய முதல் திரைப்படம் .

Unknown சொன்னது…

நன்றி நாகராஜன் சார். MSV குரலை குறிப்பிட மறந்தேன்.

கருத்துரையிடுக