பின்பற்றுபவர்கள்

வியாழன், 11 டிசம்பர், 2014

மோகன புன்னகை ஊர்வலமே மன்மத லீலையின் நாடகமே...Mogana punnagai oorvalame...

 K J யேசுதாஸ் அவர்களின் இனிமையான குரலில் இந்தப் பாடல்...திகட்டாதப்  பாடல். பாடல் காட்சி கிடைக்காததுதான் பெரியக் குறை. இப்பொழுது பாடல் காட்சியுடன்...

திரைப் படம்: உறவு சொல்ல ஒருவன் (1975)
இசை: M S விஸ்வநாதன்
இயக்கம்: தேவராஜ், மோகன்
பாடியவர்: K J யேசுதாஸ்
நடிப்பு: முத்துராமன், பத்ம பிரியா
பாடல்: தெரியவில்லைமோகன புன்னகை ஊர்வலமே
மன்மத லீலையின் நாடகமே

மோகன புன்னகை ஊர்வலமே


குளிர் விடும் கண்கள்
அன்பை பொழிகின்ற மேகம்

மலர்களின் வண்ணம் கொண்டு
சிரிக்கின்ற தேகம்

குளிர் விடும் கண்கள்
அன்பை பொழிகின்ற மேகம்

மலர்களின் வண்ணம் கொண்டு
சிரிக்கின்ற தேகம்


பளீரிடும் இன்பம் யாவும்
தணிக்கின்ற எண்ணம் வேண்டும்

தழுவாத அங்கம் தொட்டு
உறவாடவா

மோகன புன்னகை ஊர்வலமே


இனிக்கின்ற கொவ்வைச் செவ்வாய்
அழைக்கின்ற ராகம்

துடிக்கின்ற கண்ணம் ரெண்டும்
சொல்லட்டும் பாடம்

மழை முகில் கூந்தல் கண்டேன்
மதிமுகம் தோன்றக் கண்டேன்

மனதிலே மஞ்சம் கண்டேன்
உறவாடவா

மோகன புன்னகை ஊர்வலமே


ஒரு புறம் உன்னைக் கண்டால்
கோபுரக் கலசம்

மறுபுறம் பார்க்கும் போது
மேனகை தோற்றம்

ஒரு புறம் உன்னைக் கண்டால்
கோபுரக் கலசம்

மறுபுறம் பார்க்கும் போது
மேனகை தோற்றம்


நடையினில் அன்னம்
கண்டேன்

இடையினில் மின்னல்
கண்டேன்

அசைவினில் தென்றல்
கண்டேன்
உறவாடவா


மோகன புன்னகை ஊர்வலமே
மன்மத லீலையின் நாடகமே

மோகன புன்னகை ஊர்வலமே

1 கருத்து:

கருத்துரையிடுக