பின்பற்றுபவர்கள்

சனி, 6 டிசம்பர், 2014

உள்ளம் என்றொரு கோயிலிலே..ullam endroru kovilile..

Come September எனும் ஆங்கிலப் படத்தை தழுவி கதை எழுதப்பட்ட படம்.
பல காலம் கழித்து எம் ஜி ஆர் நடிப்பைக் காட்டி உள்ளார் இந்தப் படத்தில்.
இசைக்கும் நடிப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப் பட்டு பிரமாதமாக ஓடியது. நல்ல கலகலப்பான படம்.
S P முத்துராமன் உதவி இயக்குனராக அறிமுகமான படம் இது. பின்னர் அவர் ஏ வி எம் இன் ஆஸ்தான இயக்குனர் ஆனது எல்லோருக்கும் தெரியும்.
A C திருலோகசந்தர் முதலும் கடைசியுமாக எம் ஜி யாரை இயக்கிய படம் என் நினைக்கிறேன்.

இரு முறை பாடல் திரையில் வருகிறது. இரண்டாவது பாடல் சிறிது என்றாலும் அருமை. இரண்டும் கீழே உள்ளது.

திரைப் படம்: அன்பே வா (1966)
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்
குரல்: டி எம் எஸ்
நடிப்பு: எம் ஜி யார், சரோஜாதேவி
இயக்கம்: A C திருலோகசந்தர்

அன்பே வா
அன்பே வா
அன்பே வா
அன்பே வா
வா வா

உள்ளம் என்றொரு கோயிலிலே
தெய்வம் வேண்டும் அன்பே வா
உள்ளம் என்றொரு கோயிலிலே
தெய்வம் வேண்டும் அன்பே வா
கண்கள் என்றொரு சோலையிலே
தென்றல் வேண்டும் அன்பே வா
கண்கள் என்றொரு சோலையிலே
தென்றல் வேண்டும் அன்பே வா
அன்பே வா
அன்பே வா
வா வா

நீ இருந்தால்
என் மாளிகை விளக்கெரியும்
நிழல் கொடுத்தால்
என் நினைவுகள் விழித்துக்கொள்ளும்
பார்வையிலே வெளிச்சமில்லை
பகலிரவு புரியவில்லை
பாதையும் தெரியவில்லை
ஆயிரம் தான் வாழ்வில் வரும்
நிம்மதி வருவதில்லை

உள்ளம் என்றொரு கோயிலிலே
தெய்வம் வேண்டும் அன்பே வா
கண்கள் என்றொரு சோலையிலே
தென்றல் வேண்டும் அன்பே வா
அன்பே வா
அன்பே வா
வா வா

வான் பறவை
தன் சிறகை எனக்குத் தந்தால்
பூங்காற்றே
உன் உதவியும் எனக்கிருந்தால்
வானத்திலே பறந்து சென்றே
போனவளை அழைத்துவந்தே
காதலை வாழவைப்பேன்
அழுத முகம் சிரித்திருக்க
ஆசைக்கு உயிர் கொடுப்பேன்

அன்பே வா
அன்பே வா
வா

1 கருத்து:

NAGARAJAN சொன்னது…

அன்பே வா படத்தில் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் வாலி

கருத்துரையிடுக