பின்பற்றுபவர்கள்

திங்கள், 2 மார்ச், 2015

நெஞ்சுக்கு முகமே கண்ணாடி..nenjukku mugame kannaadi...

இனிமையான பாடல். டி எம் எஸ் மிக அலட்சியமாக பாடிய பாடல்களில் இதுவும் ஒன்று. திறமை இருக்குது மிக சாதாரணமாக பாடினார். ஆனால் அதே அடக்கத்துடன் சுசீலாம்மா சிறப்பாட பாடியிருக்கிறார்.
திகட்டாத பாடல்.

திரைப் படம்: மாடி வீட்டு மாப்பிள்ளை (1967)
பாடியவர்கள்: டி.எம்.சௌந்திர ராஜன், பி.சுசீலா
இசை: டி.சலபதி ராவ்
நடிப்பு: ரவிச்சந்திரன், ஜெயலலிதா
இயக்கம்: S K ஆனந்தசாரி
பாடல்: கண்ணதாசன்
நெஞ்சுக்கு முகமே கண்ணாடி
நீ நினைப்பதைக் காட்டும் முன்னாடி
நெஞ்சுக்கு முகமே கண்ணாடி
நீ நினைப்பதைக் காட்டும் முன்னாடி

ஊரறியாமல் மறைத்த போதும்
ஊரறியாமல் மறைத்த போதும்
ஓடும் விழிகள் தள்ளாடி

நெஞ்சுக்கு
உன் நெஞ்சுக்கு முகமே கண்ணாடி
நீ நினைப்பதைக் காட்டும் முன்னாடி

சபையறியாமல் நடக்கும்
அது தலை முதல் கால் வரை அளக்கும்
சபையறியாமல் நடக்கும்
அது தலை முதல் கால் வரை அளக்கும்
இடை இடையிடையே கொஞ்சம் சிரிக்கும்
அது ஏழைகள் பசி போல் இருக்கும்
இருக்கும்

நெஞ்சுக்கு முகமே கண்ணாடி
நீ நினைப்பதைக் காட்டும் முன்னாடி

ஆசையை பல நாள் அடக்கும்
அந்த அடக்கத்திலே உடல் இளைக்கும்
ஆசையை பல நாள் அடக்கும்
அந்த அடக்கத்திலே உடல் இளைக்கும்

ஆயினும் நெஞ்சத்தை மறைக்கும்
அது ஆண்களுக்கெங்கே இருக்கும் இருக்கும்

நெஞ்சுக்கு முகமே கண்ணாடி
நீ நினைப்பதைக் காட்டும் முன்னாடி

பெண்ணுக்கு ரகசியம் ஏது
தலை பின்னலும் பேசிடும் போது
பெண்ணுக்கு ரகசியம் ஏது
தலை பின்னலும் பேசிடும் போது

கண்ணுக்கு திரை  கிடையாது
அது கலந்த பின் விலகுவதேது ஏது

நெஞ்சுக்கு முகமே கண்ணாடி
நீ நினைப்பதைக் காட்டும் முன்னாடி

3 கருத்துகள்:

NAGARAJAN சொன்னது…

படம் மாடி வீட்டு மாப்பிள்ளை , தேடி வந்த மாப்பிள்ளை அல்ல

Unknown சொன்னது…

நன்றி நாகராஜன் சார், ஏதோ கவனக் குறைவு...திருத்தப் பட்டது.

h சொன்னது…

nice one http://tamilkalavai.blogspot.in/

கருத்துரையிடுக