பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 22 மார்ச், 2015

சொல்லடி அபிராமி சொல்லடி அபிராமி..Solladi abirami....

டி எம்  எஸ், கண்ணதாசன், மகாதேவன் மற்றும் சுப்பையா அனைவரும் சேர்ந்து, சிறந்து படைத்திருக்கும் ஒரு MASTER PIECE இது. அபிராமி அந்தாதியில் தொடங்கி கண்ணதாசனின் கவிதையில் பிரமாதம்.

திரைப்படம்: ஆதி பராசக்தி (1971)
நடிப்பு: S V சுப்பையா, ஜெமினி, ஜெயலலிதா
இசை: கே.வி. மஹாதேவன்
குரல்: டி.எம். சௌந்தரராஜன்
இயக்கம்:K S கோபாலகிருஷ்ணன்

பாடல்: கண்ணதாசன்









 
மணியே
மணியின் ஒலியே
ஒளிரும் அணிபுனைந்த வணியே
அணியும் அணிக்கழகே
அணுகாதவர்க்குப் பிணியே
பிணிக்கு மருந்தே
அமரர் பெரும் விருந்தே
பணியேன் ஒருவரை
நின் பத்மபாதம் பணிந்த பின்னே

சொல்லடி அபிராமி
சொல்லடி அபிராமி
வானில் சுடர் வருமோ
எனக்கு இடர் வருமோ
பதில் சொல்லடி அபிராமி
வானில் சுடர் வருமோ
எனக்கு இடர் வருமோ
பதில் சொல்லடி அபிராமி

நில்லடி முன்னாலே
நில்லடி முன்னாலே
முழு நிலவினைக் காட்டு உன் கண்ணாலே
சொல்லடி அபிராமி

பல்லுயிரும் படைத்த பரமனுக்கே
சக்தி படைத்ததெல்லாம் உன்தன் செயலல்லவோ
பல்லுயிரும் படைத்த பரமனுக்கே
சக்தி படைத்ததெல்லாம் உன்தன் செயலல்லவோ
நீ சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல்லல்லவோ
நீ சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல்லல்லவோ
இந்த சோதனை எனக்கல்ல உனக்கல்லவோ
சொல்லடி அபிராமி

வாராயோ
ஒரு பதில் கூறாயோ
நிலவென வாராயோ
அருள் மழை தாராயோ
வாராயோ
ஒரு பதில் கூறாயோ
நிலவென வாராயோ
அருள் மழை தாராயோ

வானம் இடிபடவும் பூமி பொடிபடவும்
நடுவில் நின்றாடும் வடிவழகே
கொடிகளாட முடிகளாட குடிபடை
எழுந்தாட வரும் கலையழகே

பிள்ளை உள்ளம் துள்ளும் வண்ணம் பேரிகை
கொட்டி வர மத்தளமும் சத்தமிட
வாராயோ
ஒரு பதில் கூறாயோ
நிலவென வாராயோ
அருள் மழை தாராயோ

செங்கையில் வண்டு கலிம் கலிம் என்று
ஜெயம் ஜெயம் என்றாட
இடை சங்கதமென்று சிலம்பு புலம்பொடு
தண்டை கலந்தாட
இரு கொங்கை கொடும்பகை வென்றனமென்று
குழைந்து குழைந்தாட
மலர்ப் பங்கயமே உனைப் பாடிய பிள்ளை முன்
நிலவு எழுந்தாட
விரைந்து வாராயோ
எழுந்து வாராயோ
கனிந்து வாராயோ

காளி பயங்கரி சூலி மதாங்கினி கண்களில் தெரிகின்றாள்
கண்கள் சிவந்திடும் வண்ணம் எழுந்தொரு காட்சியைத் தருகின்றாள்
வாழிய மகன் இவன் வாழிய என்றொரு வாழ்த்தும் சொல்கின்றாள்
வானகம் வையகம் எங்கணுமே ஒரு வடிவாய்த் தெரிகின்றாள்
எழில் வடிவாய்த் தெரிகின்றாள்
அன்னை தெரிகின்றாள் என் அம்மை தெரிகின்றாள்
அன்னை தெரிகின்றாள் என் அம்மை தெரிகின்றாள்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக