பின்பற்றுபவர்கள்

சனி, 16 மே, 2015

சிரிக்க சொன்னார் சிரித்தேன் ....sirikka sonnar sirithen

விருப்பமில்லாத ஒரு பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம். அதிலும் பாடச் சொல்லும் ஒரு கொடுமை. சோகத்தை தெள்ளத் தமிழிலில் அள்ளி வீசியிருக்கிறார் கவிஞர். அதையும் தடம் புரளாமல் அழகாக பாடி வழங்கியிருக்கிறார் சுசீலா அம்மா. இன்றைய இளைஞர்களுக்கு கொஞ்சம் புதுமையாகக் கூட இருக்கும்.
பாடல் முழுமையாக இல்லாமை மற்றுமொரு கொடுமை.


திரைப் படம்: கவலை இல்லாத மனிதன் (1960)
நடிப்பு: சந்திரபாபு, T R மகாலிங்கம், ராஜசுலோச்சனா
இயக்கம்: K ஷங்கர்
இசை: M S விஸ்வநாதன், T K ராமமூர்த்தி.
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்: P சுசீலா
சிரிக்க சொன்னார் சிரித்தேன்
பார்க்க சொன்னார் பார்த்தேன்
சிரிக்க சொன்னார் சிரித்தேன்
பார்க்க சொன்னார் பார்த்தேன்
எனக்கென ஓர் உணர்ச்சி இல்லை தோழி
காதல் இன்னமுதே வாழிய நீ வாழி

சிரிக்க சொன்னார் சிரித்தேன்
பார்க்க சொன்னார் பார்த்தேன்
எனக்கென ஓர் உணர்ச்சி இல்லை தோழி
காதல் இன்னமுதே வாழிய நீ வாழி

ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா

இதயம் காட்டும் கண்ணாடி வதனமில்லையா
இரு விழிகள் படைத்திருந்தும் புரியவில்லையா
இதயம் காட்டும் கண்ணாடி வதனமில்லையா
இரு விழிகள் படைத்திருந்தும் புரியவில்லையா
சிதறி வரும் வார்த்தைகளில் தெரியவில்லையா
சிதறி வரும் வார்த்தைகளில் தெரியவில்லையா
சிந்தையிலே தெளிவுடையோர் யாருமில்லையா

சிரிக்க சொன்னார் சிரித்தேன்
பார்க்க சொன்னார் பார்த்தேன்
எனக்கென ஓர் உணர்ச்சி இல்லை தோழி
காதல் இன்னமுதே வாழிய நீ வாழி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக