பின்பற்றுபவர்கள்

சனி, 2 மே, 2015

தூரத்தில் நான் கண்ட உன் முகம்...thooraththil naan kanda...

G. ராமநாதன், T R பாப்பா, K V மகாதேவன், விஸ்வனாதன் ராமமூர்த்தி ஆகியோர்களின் இசையில் கேட்ட பல பாடல்களுக்கு பிறகு, இளையராஜாவின் பாடல்களில் பல இப்படி  ஆழமாக ஒரு பாதிப்பை மனசில் ஏற்படுத்தும். வைதேகி காத்திருந்தாள், காதல் ஓவியம், வள்ளி இப்படி இன்னும் பல படப் பாடல்கள் இதில் அடங்கும். ஆனாலும், இந்தப் பாடல் ஒரு தனி வகைதான். இனிமையான இசை, பாடல் வரிகளையும் மீறி ஜானகி அம்மாவின் குரல் என்னமோ பண்ணுகிறது மனதை.


திரைப்படம்: நிழல்கள் (1980)
நடிப்பு: நிழல்கள் ரவி, ரோகிணி
இயக்கம்: பாரதிராஜா
இசை : இளையராஜா
பாடியது: S ஜானகி
பாடல்: வைரமுத்துஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்
தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்

சுகம் நூறாகும் காவியமே
ஒரு சோகத்தின் ஆரம்பமே
இது உன்னை எண்ணி பாடும் ராகம்
தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

வேங்குழல் நாதமும் கீதமும்
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
வேங்குழல் நாதமும் கீதமும்
மையலின் ஏக்கமும் தாபமும்
மாயன் உனது லீலை இதுவே
ஐய்யன் உன் தஞ்சம் என் நெஞ்சமே
தினம் அழைத்தேன் ப்ரபு உன்னையே
ஆடும் காற்றிலே புது ராகம் தோன்றுமா
தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்

காதல் எனும் கீதம் பாடி
உருகும் ஒரு பேதையான மீரா
மீரா மீரா மீரா மீரா
வேலை வரும் போது வந்து
காக்கும் கரம் காக்கும் என்று
வீணை மீட்டும் தேவி உள்ளமே
தீராத ஆசையோடு வாடாத பூக்களோடு
காலை மாலை பூஜை செய்தும் கேட்கவில்லையா
கனவு போல வாழ்வில் எந்தன்
லல லல லல லல
கவலை யாவும் மாற வேண்டும்
லல லல லல லல
கனவு போல வாழ்வில் எந்தன்
கவலை யாவும் மாற வேண்டும்
இரக்கமும் கருணையும் உனக்கில்லையோ
நாளும் எனை ஆளும்
துணை நீயே என வாழ்ந்தேன்
மறவேன் மறவேன் மறவேன்
உன் நினைவுகள் என்னிடம் தினம்
உறவின் பெருமை மறவேன்
வரும் விழி தரும் அதில்
உறவுகள் தெரிவதும் ஒரு சுகம்
வானமும் மேகமும் போலவே
வானமும் மேகமும் போலவே
நீந்திய காலங்கள் ஆயிரம்
மேகம் மறைந்த வானின் தனிமை
இன்று நான் கண்டதும் உண்மையே
தினம் அழைத்தேன் ப்ரபு உனையே

ஆடும் காற்றிலே புது ராகம் தோன்றுமா
தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்
ம்ம் ம்ம்

1 கருத்து:

கருத்துரையிடுக