பின்பற்றுபவர்கள்

திங்கள், 27 ஏப்ரல், 2015

வேறென்ன நினைவு உன்னைத் தவிர....verenna niaivu unnai thavira..


மூன்று குரல்களில் இரண்டு ஜோடிகள் பாடும் பாடல்கள் அப்போது பிரசித்தம். இனிமையாகப் பாடப் பட்ட பாடல். பி.சுசீலா அம்மா, இரு பெண்களுக்கும் அழகாக குரல் கொடுத்திருக்கிறார்.

திரைப் படம் : சுபதினம்  (1969) 
பாடலாசிரியர்: வாலி          
இசை : கே.வி.மகாதேவன்                     
பாடியவர்:  டி.எம்.,எஸ்,  பி.சுசீலா,  ஏ.எல்.ராகவன்     
நடிப்பு: முத்துராமன், புஷ்பலதா










வேறென்ன நினைவு 

உன்னைத் தவிர 
இங்கு வேறேது நிலவு 

பெண்ணைத் தவிர

வேறென்ன நினைவு 

உன்னைத் தவிர
 
இங்கு வேறேது நிலவு

பெண்ணைத் தவிர

வேறென்ன வேண்டும் 

நெஞ்சைத் தவிற
இதில் வேறேது தோன்றும்

அன்பைத் தவிர

நான் சொல்லியா உன்னை மனம் பார்த்தது
அது தான் வந்து  உறவாட இடம் பார்த்தது
தேன் சொல்லியா வண்டு சுவை பார்ப்பது 
அது தான் கொண்ட பசியாற இரைத் தேடுது

விழியே மனதின் கதவாக

நுழைந்தேன் ஒருநாள் மெதுவாக
வேறென்ன நினைவு 

உன்னைத் தவிர 
இங்கு வேறேது நிலவு 

பெண்ணைத் தவிர

ஒரு நாளிலே எண்ணம் ஓராயிரம்
நெஞ்சில் உருவாகி உனை தேடி போராடிடும்

அலை மோதிடும் உந்தன் மன ஓடையில் 
இந்த இளமாது மலர் மேனி நீராடிடும்

நெடு நாள் கனவை கலைப்பாயோ
நிழல்தான் எனக்கே கொடுப்பாயோ 

வேறென்ன நினைவு
 
உன்னைத் தவிர
இங்கு வேறேது நிலவு 
பெண்ணைத் தவிர

வேறென்ன வேண்டும் 

நெஞ்சைத் தவிற
இதில் வேறேது தோன்றும்
அன்பைத் தவிர

உயிர் வாழ்வதே உந்தன் ஒரு பார்வையில்
என்னை அன்பென்று நீ சொல்லும் ஒரு வார்த்தையில்
மறந்தால் என்ன அன்பு மறைந்தா விடும்
உந்தன் கால் மீது தலை வைத்து கண் மூடிடும்

தொட்டுத்தான் தொடர்ந்தேன் துணையோடு

அள்ளித்தான் அணைத்தேன் துணிவோடு

வேறென்ன நினைவு 
உன்னைத் தவிர
இங்கு வேறேது நிலவு 
பெண்ணைத் தவிர





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக