பின்பற்றுபவர்கள்

புதன், 15 ஏப்ரல், 2015

என்ன தவம் செய்தனை...enna thavam seithanai..

இந்த பாடலும் கருத்தும் copy and pasteதான். என் மனதிற்கு மிகவும் பிடித்த பாடல் ஆதலால் இதை எனக்கு பகிர்நதவர்க்கு எனது மனமார்ந்த நன்றி. 
ஆயர் பெண்கள் யசோதாவை பார்த்து பாடுவதை போல் அமைந்த நெகிழ்வான பாடல்.
இயற்றியவர் பாபநாசம் சிவன் அவர்கள்.
ஆதி தாளம், காபி ராகத்தில் அமைந்த பாடல்.

என்ன தவம் செய்தனை
என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரப்ரம்மம் அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்யதனை யசோதா

ஈரேழு புவனங்கள் படைத்தவனை
கையில் ஏந்தி சீராட்டி பாலூட்டி தாலாட்ட
நீ என்ன தவம் செய்தனை
உன் கையில் ஏந்தி சீராட்டி பாலூட்டி தாலாட்ட
நீ என்ன தவம் செய்தனை
பிரம்மனும் இந்திரனும் மனதில் பொறமை
கொள்ள உரலில் கட்டி வாய் பொத்தி
கெஞ்ச வைத்தாய் கண்ணனை
தாயே என்ன தவம் செய்தனை

சனகாதியர் தவ யோகம் செய்து வருந்தி
சாதித்ததை, புனிதமாக எளிதில் பெற
என்ன தவம் செய்தனை
யசோத எங்கும் நிறை பரப்ரம்மம்
அம்மா என்றழைக்க என்ன தவம்
செய்தனை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக