பின்பற்றுபவர்கள்

வியாழன், 9 ஏப்ரல், 2015

ஒரு பிருந்தாவனத்தினில் நந்த குமாரனின் குழலோசை..oru brinthavanaththinil nandha kumaranin...

ஒரு அபூர்வமான பாடல்...இந்தத் திரைப்படம் வெளி வந்ததா என்பதே தெரியவில்லை. இணையத்தில் எங்கும் இதைப் பற்றி விபரங்கள் இல்லை. நாகராஜன் சார் உதவுவார் என எதிர்ப்பார்க்கிறேன். இந்தப் பாடல் தெலுங்கிலிருந்து மொழி மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம். இனிமையாக, மனதிற்கு இதமான இசையில் பாடல் அழகாக பாடப்பட்டிருக்கிறது.

திரைப்படம்: கங்கைக் கரைக் காற்றே
பாடியவர்கள்: எஸ் பி பி, சித்ரா
பாடல்: தெரியவில்லை
இசை: தெரியவில்லை
இயக்கம்: விபரம் இல்லை

ஹரே ராமா ஹரே கிருஷணா ஹரே ராமா ராமா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ஹரே ராமா ராமா ஹரே கிருஷ்ணா
ஒரு பிருந்தாவனத்தினில் நந்த குமாரனின் குழலோசை
அது வந்ததும் வந்தது காதலி கைகளில் வளையோசை
ஒரு பிருந்தாவனத்தினில் நந்த குமாரனின் குழலோசை குழலோசை
அது வந்ததும் வந்தது காதலி கைகளில் வளையோசை வளையோசை

காதலின் ராகமே கேட்குதா மேகமே
காதலின் ராகமே கேட்குதா மேகமே

கண்மணி

 என்ன
இந்த நேரம் வானம் பூத் தூவுமே
ம்
ஒரு பிருந்தாவனத்தினில் நந்த குமாரனின் குழலோசை குழலோசை
அது வந்ததும் வந்தது காதலி கைகளில் வளையோசை வளையோசை
காலை செந்தூரம் பாவைக் கண்ணோரம் காதல் சந்தோஷமே

ஆசையின் தேர்வலம் போகுதே ஊர்வலம்
சேலை செண்டோடு வாழ்வைக் கொண்டாடும் யோகம்
என் யோகமே

ஊஞ்சல் போல் ஆடலாம் ஓடி வா கண்மணி
இளமையின் கனவு மலர்கின்ற பொழுது இது ஒரு கார் காலம்
இதழ்களை விரித்து மதுரத்தை தெளித்து சிரித்தது பூக் கோலம்
அள்ளும் கை மீது முல்லை பந்தாக ஆடும் என் தேகமே

ஒரு பிருந்தாவனத்தினில் நந்த குமாரனின் குழலோசை குழலோசை
அது வந்ததும் வந்தது காதலி கைகளில் வளையோசை வளையோசை

காலம் கொண்டாடும் காதல் சங்கீதம் வாழ்வின் உல்லாசமே தேவரும் மூவரும் தேவி உன் சரணமே

பூஜை இல்லாமல் போதை பண்பாடு கோவில் உண்டானதே

கண்களில் தாமதம் கொண்டதே பெண் இனம்

இடையினில் தொடங்கி இதழ்களில் வழியும் இளமையை ருசிக்கட்டுமா

படிகளை ஒதுக்கி தலைவனின் மடியில் தனிமையை ரசிக்கட்டுமா

ஒன்னில் ஒன்னாகி மின்னல் உண்டாக்கி உன்னை மயக்கட்டுமா

ஓ ஒரு பிருந்தாவனத்தினில் நந்த குமாரனின் குழலோசை குழலோசை

வந்ததும் வந்தது காதலி கைகளில் வளையோசை வளையோசை

காதலின் ராகமே கேட்குதா மேகமே
காதலின் ராகமே கேட்குதா மேகமே

ரியலி

ஓடி பாடி கூடும் நேரம் மௌனப் பூ தூவுமே

ஒரு பிருந்தாவனத்தினில் நந்த குமாரனின் குழலோசை குழலோசை

அது வந்ததும் வந்தது காதலி கைகளில் வளையோசை வளையோசை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக