பின்பற்றுபவர்கள்

சனி, 4 ஏப்ரல், 2015

ராணி மகாராணி ராஜ்ஜியத்தின் ராணி...rani maga rani...

இசை, பாடிய விதம், பாடிய குரல், பாடல் வரிகள், படப்பிடிப்பு எல்லாவற்றிலும் ஒரு பிடிப்புடன் ஈடுபாடுடன் குறையேதும் சொல்ல முடியாத வகையில் அமைந்த ஒரு சில பாடல்களில் இதுவும் ஒன்று.


திரைப்படம்: சரஸ்வதி சபதம் (1966)
பாடியவர்: T.M. சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: K.V. மஹாதேவன்
நடிப்பு: சிவாஜி கணேசன், ஜெமினி, சாவித்திரி, K R விஜயா, தேவிகாPodcast Hosting - Listen Audio -

ராணி மகாராணி
ராஜ்ஜியத்தின் ராணி
 வேக வேகமாக வந்த நாகரீக ராணி 
ராணி மகாராணி
ராஜ்ஜியத்தின் ராணி
 வேக வேகமாக வந்த நாகரீக ராணி 
ராணி மகாராணி
ராஜ்ஜியத்தின் ராணி
 வேக வேகமாக வந்த நாகரீக ராணி
 வேக வேகமாக வந்த நாகரீக ராணி

நேற்று வரை வீதியிலே நின்றிருந்த ராணி
நிலைமை தனை மறந்து விட்ட தலைகனத்த ராணி
நேற்று வரை வீதியிலே நின்றிருந்த ராணி
நிலைமை தனை மறந்து விட்ட தலைகனத்த ராணி
யானை மாலை போட்டதாலே ஆள வந்த ராணி
அழகு பொம்மை போல வந்து கொலுவிருக்கும் ராணி
யானை மாலை போட்டதாலே ஆள வந்த ராணி
அழகு பொம்மை போல வந்து கொலுவிருக்கும் ராணி
அழகு பொம்மை போல வந்து கொலுவிருக்கும் ராணி

ராணி மகாராணி
ராஜ்ஜியத்தின் ராணி
வேக வேகமாக வந்த நாகரீக ராணி
நாகரீக ராணி

அங்கமெங்கும் தங்கம் வைரம் போட்டுவிட்டதால்
அறிவினோடு படையெடுத்து போரிட வந்தாள்
அங்கமெங்கும் தங்கம் வைரம் போட்டுவிட்டதால்
அறிவினோடு படையெடுத்து போரிட வந்தாள்
பொங்கி வந்த செல்வத்தாலே புத்தி போனதால்
பொங்கி வந்த செல்வத்தாலே
புத்தி போனதால்
புலமையோடும் கவிதையோடும் போரிட வந்தாள்
புலமையோடும் கவிதையோடும் போரிட வந்தாள்
போரிட வந்தாள்

ராணி மகாராணி
 ராஜ்ஜியத்தின் ராணி
வேக வேகமாக வந்த நாகரீக ராணி
வேக வேகமாக வந்த நாகரீக ராணி
கவியரசைப் புவியரசு வெற்றி கொண்டதுண்டா
கலைமகளைத் திருமகள் தான் வெற்றி கண்டதுண்டா
கவியரசைப் புவியரசு வெற்றி கொண்டதுண்டா
கலைமகளைத் திருமகள் தான் வெற்றி கண்டதுண்டா
சபையறிந்த புலவனுக்கு சிறையும் ஒரு வீடு
அறிவிழந்த அரசியர்க்கு நாடும் ஒரு காடு
சபையறிந்த புலவனுக்கு சிறையும் ஒரு வீடு
அறிவிழந்த அரசியர்க்கு நாடும் ஒரு காடு

ராணி மகாராணி
ராணி மகாராணி
ராஜ்ஜியத்தின் ராணி
ராஜ்ஜியத்தின் ராணி
வேக வேகமாக வந்த நாகரீக ராணி
வேக வேகமாக வந்த நாகரீக ராணி

ராணி மகாராணி
ராஜ்ஜியத்தின் ராணி
வேக வேகமாக வந்த நாகரீக ராணி
வேக வேகமாக வந்த நாகரீக ராணி
வேக வேகமாக வந்த நாகரீக ராணி
வேக வேகமாக வந்த நாகரீக ராணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக