பின்பற்றுபவர்கள்

வியாழன், 18 ஜூன், 2015

வான் நிலா நிலா அல்ல..vaan nila nila alla..


எப்படி எல்லாமோ எதிர்பார்த்த சிவச்சந்திரன் எப்படியோ ஆகிப் போனார். நல்லது. இந்தப் பாடல் வரிகளை எடுத்து எழுதும் போதே ஒரு இதமான இன்பம். சுகமான பாடல். மெல்லிய இசையில் மென்மையான கவிதை வரிகள். அழகான வயலின்.
முக்கியமாக எஸ் பி பி.....


திரைப் படம்: பட்டினப் பிரவேசம் (1977)
இசை: M.S.விஸ்வநாதன்
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்: S.P.பாலசுப்ரமணியம் மற்றும் வயலின்.....!!!???
நடிப்பு: ஜெய்கணேஷ், சிவச்சந்திரன், மீரா, ஸ்வர்ணா
இயக்கம்: K பாலசந்தர்
லா ல ல லாலா லலல லா ல லா
லா ல ல லாலா லலல லா ல லா
லா ல ல லாலா லலல லா ல லா

வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா
வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா
என் தேவியின் நிலா
தேன் நிலா எனும் நிலா
என் தேவியின் நிலா
நீயில்லாத நாளெல்லாம்
நான் தேய்ந்த வெண்ணிலா
வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா

மானிலாத ஊரிலே
சாயல் கண்ணிலா
மானிலாத ஊரிலே
சாயல் கண்ணிலா

பூவிலாத மண்ணிலே
ஜாடை பெண்ணிலா

வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா

தெய்வம் கல்லிலா
ஒரு தோகையின் சொல்லிலா
தெய்வம் கல்லிலா
ஒரு தோகையின் சொல்லிலா
பொன்னிலா பொட்டிலா
புன்னகை மொட்டிலா
அவள் காட்டும் அன்பிலா
இன்பம் கட்டிலா
அவள் தேகக் கட்டிலா
இன்பம் கட்டிலா
அவள் தேகக் கட்டிலா
தீதிலா காதலா ஊடலா கூடலா
அவள் மீட்டும் பண்ணிலா

வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா

வாழ்க்கை வழியிலா
ஒரு மங்கையின் ஒளியிலா
வாழ்க்கை வழியிலா
ஒரு மங்கையின் ஒளியிலா
ஊரிலா நாட்டிலா
ஆனந்தம் வீட்டிலா
அவள் நெஞ்சின் ஏட்டிலா

சொந்தம் இருளிலா
ஒரு பூவையின் அருளிலா
சொந்தம் இருளிலா
ஒரு பூவையின் அருளிலா
எண்ணிலா ஆசைகள்
என்னிலா கொண்டதேன்
அதைச் சொல்வாய் வெண்ணிலா

வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா
என் தேவியின் நிலா
நீயில்லாத நாளெல்லாம்
நான் தேய்ந்த வெண்ணிலா
வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா


2 கருத்துகள்:

tubetamil சொன்னது…

FREE SUBMIT YOUR BLOG www.freeurlsubmission.tk

Tamil சொன்னது…

அழகான நிலா கவிதைகளை வரிகளை படிக்க 👇

Nila kavithai in tamil

கருத்துரையிடுக