பின்பற்றுபவர்கள்

புதன், 27 ஜனவரி, 2016

தெரியாதோ நோக்கு தெரியாதோ

பெண் சிவாஜி என்றழைக்கப் பட்ட, ஒரு பெண் சிங்கம் பாடி நடித்தது. என்னவொரு குரல், நடிப்பு.
இன்றைக்கும் பெண் நடிகைகள் அழகாகத்தான் இருக்கிறார்கள். தங்களை திரைப்படத்துறையில் நிலை நிறுத்த நடிப்பு கலையை விட தாராளமான முத்தக் கலையே அவர்களுக்கு கைக் கொடுக்கிறது. என்ன பண்ணுவது அவர்களுக்கு தெரிந்ததைதானே செய்ய முடியும்?திரைப்படம்: சூர்ய காந்தி (1973)
பாடியவர்: மனோரமா
இசை: M S விஸ்வநாதன்
பாடல்: வாலி
இயக்கம்: முக்தா S ஸ்ரீனிவாசன்
நடிப்பு: முத்துராமன், ஜெயலலிதாதெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது
பைத்தியம்போல் தோணுமுன்னு தெரியாதோ

தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது
பைத்தியம்போல் தோணுமுன்னு தெரியாதோ

அவாளவா ஆத்துக்குள்ளே ஆயிரம் இருக்கும்
காதல் ஆரம்பிக்கும் நேரம் முதல் நாடகம் இருக்கும்
தானா சிரிப்பா அவ தனியா நடப்பா
ஏதோ நினைப்பா சும்மா பேசிண்டே இருப்பா

தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது
பைத்தியம்போல் தோணுமுன்னு தெரியாதோ

பூஜைக்காக போறவம்போல் ஆம்பிளை போவான்
அங்கே பூஜை தேடி பொம்மனாட்டி நேரத்தில் வருவா
சாமியக்கண்டாளா அவ பூஜயக்கண்டாளா
அந்த சாமியக்கண்டாளா அவ பூஜயக்கண்டாளா
வந்த மூர்த்தியக்கண்டாளா பையன் மூஞ்சியக்கண்டாளா

தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது
பைத்தியம்போல் தோணுமுன்னு தெரியாதோ

படத்த பாத்து பட்ட பாடு நடத்திப்பாக்குறான்
சினிமாபடத்த பாத்து பட்ட பாடு நடத்திப்பாக்குறான்
அவ பழைய கால டூயட் பாட்ட பாடி பாக்கறா
மனமோகனா....
அங்கே வாடுதே கனவெனும் என் மனம்
தரையில் உருள
அவன் தலயைத் தடவுறான்
இவ தரையில் உருளரா
அவன் தலயைத் தடவுறான்
அறையில் நடப்பதை அவ அம்பலமாக்குறா

தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது
பைத்தியம்போல் தோணுமுன்னு தெரியாதோ

தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது
பைத்தியம்போல் தோணுமுன்னு தெரியாதோ


2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஆச்சியின் ஆட்சி...

NAGARAJAN சொன்னது…

பாடலாசிரியர் கண்ணதாசன்

கருத்துரையிடுக