பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா

சுசீலா அம்மாவின் குரல் இனிமையே இனிமை. அதுவும் இந்தப் பாடலில் மிக அழகாக குரல் கொடுத்திருக்கிறார். மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் வகையில் பாடல், இசை, நடிப்பு என எல்லாம் சிறப்பாக அமைந்த பாடல்.


திரைப்படம்: கந்தன் கருணை (1967)

நடிப்பு: சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி,

கே. ஆர். விஜயா, ஜெயலலிதா

பாடல்: கண்ணதாசன்

பாடியவர்: P.சுசீலா

இசையமைப்பாளர்: கே.வி.மகாதேவன் 


இயக்குநர்: ஏ.பி.நாகராஜன்  
Embed Music - Upload Audio Files - Solla Solla -Kandhan Karunai...தந்தைக்கு மந்திரத்தின் சாரப் பொருளுரைத்து
தகப்பன் சுவாமி என பெயர் பெற்ற முருகா
மண்ணுக்கும் விண்ணுக்கும் சுவாமி என வந்த
என் சுவாமிக்கும் நாதனே சுவாமி நாதா

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளம் எல்லாம் உன் பெயரை
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளம் எல்லாம் உன் பெயரை
சொல்லச் சொல்ல இனிக்குதடா

பிள்ளை பிராயத்திலே
பெரிய பெயர் பெற்றவனே
பிள்ளை பிராயத்திலே
பெரிய பெயர் பெற்றவனே
உள்ளம் எல்லாம் உன் பெயரை
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா

முருகன் என்றால் அழகன் என்று
தமிழ் மொழி கூறும்
அழகன் எந்தன் குமரனென்று
மன மொழி கூறும்
முருகன் என்றால் அழகன் என்று
தமிழ் மொழி கூறும்
அழகன் எந்தன் குமரனென்று
மன மொழி கூறும்
உயிரினங்கள் ஒன்றை ஒன்று
வாழ்த்திடும் போது
உயிரினங்கள் ஒன்றை ஒன்று
வாழ்த்திடும் போது
அதன் உள்ளிருந்து வாழ்த்துவது
உன் அருளன்றோ கந்தா உன் அருளன்றோ
முருகா

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளம் எல்லாம் உன் பெயரை

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா

உலகில் ஆடும் தொட்டில் எல்லாம்
உன் பெயர் பாடும்
உண்மை பேசும் மொழிகள் எல்லாம்
உன் புகழ் பேசும்
யுகங்கள் எல்லாம் மாறி மாறி
சந்திக்கும் போது
யுகங்கள் எல்லாம் மாறி மாறி
சந்திக்கும் போது
உன் முகமலரின் அழகு மட்டும்
முதுமை வராது
கந்தா முதுமை வராது
குமரா

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளம் எல்லாம் உன் பெயரை

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக