பின்பற்றுபவர்கள்

திங்கள், 24 அக்டோபர், 2016

உன்னை தொட்ட காற்று வந்து என்னைத்தொட்டது.... Unnai thotta kaatru vandhu


SPBயின்  ஆரம்ப  கால  பாடல்களில்  இதுவும்  ஒன்று. இதிலும் அவரை ஹம்மிங்  மட்டுமே  பண்ண  வைத்திருக்கிறார்  இசையமைப்பாளர். கூட சுசீலாம்மாவின்  இனிமையான  மென்மை குரலில்  கவிதையை  இசைக்க வைத்திருக்கிறார். அருமை. கேட்க  கேட்க  திகட்டாத  பாடல்.

படம்: நவக்கிரகம் (1970)
இசை: V. குமார்
நடிப்பு: சிவக்குமார், லக்ஷ்மி
குரல்கள்:  SPB, P. சுசீலா
பாடல்: கவிஞர் வாலிUpload Music - Audio Hosting -
ஆஹா ஆஹா ஆ ஆ
ஹும்ம்ம் ஹும்ம்ம்ம்
ஹா ஹா ஹா ஆ ஆ ஆ

உன்னை தொட்ட காற்று வந்து என்னைத்தொட்டது
உன்னை தொட்ட காற்று வந்து என்னைத்தொட்டது

அதுவே போதும் என்று பெண்மை இன்று கேட்டுக்கொண்டது
வரலாம் தொடலாம் மணநாள் வரும் போது
தருவேன் பெறலாம் பக்கம் நீ வரும் போது
உன்னை தொட்ட காற்று வந்து என்னைத்தொட்டது

உன் பாதம் தொட்ட அலைகளை என் பாதம் தொட்டது
நம் இருவரையும் ஒன்று சேர்க்க பாலமிட்டது

ஹஹா ஒஹோ ஆ ஹா

உன் பாதம் தொட்ட அலைகளை என் பாதம் தொட்டது
நம் இருவரையும் ஒன்று சேர்க்க பாலமிட்டது

இந்த நேரம் பார்த்து நானம் வந்து கோலமிட்டது
கொஞ்ச நாள் வரையில் பொருத்திருக்க ஆணையிட்டது

ஹஹா ஒஹோ ம்ம்ம்ம் லலாஆ

உன்னை தொட்ட காற்று வந்து என்னைத்தொட்டது
அதுவே போதும் என்று பெண்மை இன்று கேட்டுக்கொண்டது

மழை தூரல் போட்டு சாரல் வந்து உன்னை நனைத்தது
அது உன்னை நனைத்து தெறித்த போது என்னை நனைத்தது

ஹ ஹா ஆ ஆ.. ஓ ஓ..ஹோ  ஹோ   .ஹோ  ஹோ. ஆஆஆ

மழை தூரல் போட்டு சாரல் வந்து உன்னை நனைத்தது
அது உன்னை நனைத்து தெறித்த போது என்னை நனைத்தது
அது துளித்துளியாய் எனது தோளில் மீது இடம் பிடித்தது
இந்த இயற்கையெல்லாம் இருவரையும் இணைத்து பார்க்குது
அதுவே போதும் என்ற பெண்மை இன்று கேட்டுக்கொண்டது
வரலாம் தொடலாம் மணநாள் வரும் போது
தருவேன் பெறலாம் பக்கம் நீ வரும் போது

உன்னை தொட்ட காற்று வந்து என்னைத்தொட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக