பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 14 அக்டோபர், 2016

ஸஸஸ ஸநி தாஸநி பாநிதா மாதபாமகா நிவேதா


நீண்ட நாட்களுக்கு பிறகு, முக நூல் நண்பர்கள் சிலரின் விருப்பமாக இன்று இந்த பாடலை எனது பிலாகில் பதிவிடுகிறேன்.
திரைப்படம்: நீ பாதி நான் பாதி (1991)
 நடிப்பு: ரகுமான், கெளதமி
இசை: மரகதமணி
இயக்கம்: வசந்த்

இந்த பாடல் கருத்தும், பாடல் வரிகளும் முழுக்க கொடுத்து உதவியவர்கள்... myspbblogspot.in.
எனது  நன்றிகள்  அவர்களுக்கு. கேட்க்காமல்  கையாண்டதுக்கு மன்னிக்கணும்.. கோவை ரவி சார்..


சேற்றில் முளைத்த (யப்பாடி... இப்போதுதான் தமிழில் எழுதும் திருப்தி கிடைக்கிறது!) செந்தாமரை போன்று ஒரு அழகான பாடல். பாடலின் விசேஷமே பாடல் என்று எந்த வரிகளுமில்லாததுதான்!.
ஸ்வரங்களை மட்டுமே வைத்துக்கொண்டு "நிவேதா" என்ற ஒற்றை வார்த்தையைக் கொண்டு ஒரு பாடல் என்று சொன்னால் நம்புவதற்கு வேண்டுமானால் கஷ்டமாக இருக்கலாம். கேட்பதற்கு - சான்ஸே இல்லை :) 

இம்மாதிரிப் பாடல்களைக் கேட்கவைக்க வேண்டுமென்றால் குரலில் தேனொழுக வேண்டும். "பிடி பாலுவை" என்று பிடித்துக்கொண்டு வந்து மரகதமணி பாட வைத்திருப்பார் போல. மனுஷர் 'பாட வேண்டுமே' என்றா பாடுவார்?. வெளுத்து வாங்கிவிட்டுப் போயிருக்கிறார். மரகதமணியும் பாலுவும் சேர்ந்து கொண்டு நமக்கு விளையாட்டு காட்டியிருக்கிறார்கள்.
ஆ... இன்னொரு முக்கிய ஆளும் விளையாட்டுக் காட்டியிருக்கிறார் - அவர் ஒளிப்பதிவாளர். ஒரே ஒரு பாடலுக்கு இவ்வளவு அதிகமான காட்சிகள் அமைக்கப்பட்ட பாடல் இதுவாகத்தானிருக்கும். சில நொடிகளே நீடிக்கும் ஏகப்பட்ட "கட் ஷாட்"கள். அழகான விளம்பரப் படம் போல வர்ணமயமாக பலவித உடைகளில் ரகுமானும் கெளதமியும் வருவார்கள் - இயல்பான செய்கைகளுடன். ஸ்வரங்களை அழகாகப் பாடியது போதாதென்று "நிவேதா"வைக் குழைத்துக் குழைத்து பாலு பாடியிருக்கிறார் பாருங்கள். இந்த மாதிரியெல்லாம் எனக்குப் பாடத் தெரிந்தால் வீட்டில் சப்பாத்திக் கட்டையெல்லாம் பறக்க விடுவேனா?


  Download Music - Embed Audio - ஸஸஸ


ஸநி தாஸநி பாநிதா மாதபாமகா நிவேதா
ஸஸஸ ஸநி தாஸநி பாநிதா மாதபாமகா நிவேதா
பபதநிஸ ரீகரீக ஸ பபதநிஸ ரீகரீக ஸ ஸரிகமகரீக ஸாரிதாஸ பாதகா நிவேதா
ஸஸஸ ஸநி தாஸநி பாநிதா மாதபாமகா நிவேதா
ஸரிகமா பதநிஸ ஸநிதப மகரிஸ ஸரிகமா பதநிஸ ஸநிதப மகரிஸ நிநிநிநிநி நிநிநிநிநி நிநிநிநிநி நிதபா நிநிநிநிநி நிநிநிநிநி நிநிநிநிநி நிவேதா நிநிநிநிநி நிநிநிநிநி நிநிநிநிநி நிதபா நிநிநிநிநி நிநிநிநிநி நிநிநிநிநி நிவேதா
காரிஸ ரிரிரி ரிஸநி ததத (உ) தாபம ககக ஸரிகதபா ரிஸரிக ஸா காரிஸரிதப மபக நிவேதா
ஸஸஸ ஸநி தாஸநி பாநிதா மாதபாமகா நி வே தா
ஸாஸஸ ஸநி தாஸநி பாநிதா மாதபாமகா நி வே தா
பபதநிஸ ரீகரீக ஸ பபதநிஸ ரீகரீக ஸ பபதநிஸ ரீகரீக ஸ பபதநிஸ ரீகரீக ஸ ஸரிகமகரீக ஸாரிதாஸ பாதகா நிவேதா
ஸாஸஸ ஸநி தாஸநி பாநிதா மாதபாமகா நி வே தா.........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக