பின்பற்றுபவர்கள்

புதன், 15 ஆகஸ்ட், 2012

பொன்னான மனமெங்கு போகின்றது சொல்லுங்கள் மேகங்களே


இனிமையான பாடல். வசந்த மாளிகைக்கு பின் இந்த படம் தயாரித்த விஜயா சுரேஷ் கம்பைன்ஸ் அதே செட்டிங்க்ஸில் இந்த படத்தை குறைந்த செலவில் எடுத்ததாக நினைவு.

திரைப் படம்: திருமாங்கல்யம் (1974)
இசை: M S விஸ்வனாதன்
நடிப்பு: முத்துராமன், ஜெயலலிதா
குரல்கள்: S P B, P சுசீலா
பாடல்: கண்ணதாசன்

http://asoktamil.opendrive.com/files/Nl8xNjM2MzU4M19GYzMyQl9hNzFm/Ponnana%20manam%20engu.mp3





பொன்னான மனமெங்கு போகின்றது
சொல்லுங்கள் மேகங்களே
ஹே ஹே ஹே ம் ம் ம்
பொன்னான மனமெங்கு போகின்றது
சொல்லுங்கள் மேகங்களே
என்னாசைக் கண்ணன் நாள் பார்த்து வந்தான்
என்னாசைக் கண்ணன் நாள் பார்த்து வந்தான்
இங்கே வா தென்றலே
இங்கே வா தென்றலே
பொன்னான மனமெங்கு போகின்றது
சொல்லுங்கள் மேகங்களே

தாலி கட்டி வேலியிட்டு தங்கத்துக்கு நான் கொடுத்தேன்
பந்தம் அது சொந்தம்
தாலி கட்டி வேலியிட்டு தங்கத்துக்கு நான் கொடுத்தேன்
பந்தம் அது சொந்தம்

சொந்தமென்று வந்த பின்னே
சொர்கமொன்று கேட்கிறது நெஞ்சம்
அது மஞ்சம்

பொன்னான மனமெங்கு போகின்றது
சொல்லுங்கள் மேகங்களே

ஹே ஹே ஹே ஆஹாஹா
ஆஹா ஹா ஹா ஹா ஹா ஆஹா ஹா

எங்கோ ஒரு நாதம் அதில் ஏதோ ஒரு ராகம்
எனக்குள்ளே கேட்கின்றது
அது ஆசைகள் தாளாமல் நான் பாடும் கீதம்
என் உள்ளம் சொல்கின்றது
அன்று கோபம் கொண்டு சிவந்த கன்னம்
நாணம் கொண்டு சிவந்ததென்ன மானே
சுகம்தானே
இன்று வேண்டுமென்று எண்ணிவிட்டேன்
வெட்கம் கொண்டு மாறியது பெண்மை
அது உண்மை
பொன்னான மனமெங்கு போகின்றது
சொல்லுங்கள் மேகங்களே

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அதிகம் கேட்டிராத பாடல்... நன்றி சார்....

NAGARAJAN சொன்னது…

வசந்த மாளிகை வெளி வந்த நாள் 29 செப் 1972 . எனவே இப்படத்தின் செட்டினை திருமாங்கல்யம் படத்திற்கு உபயோகப் படுத்தியதற்கான வாய்ப்புகள் குறைவு, ஏனெனில், திருமாங்கல்யம் வந்த ஆண்டு 1974 . (இது என்னுடைய ஊகம்தான்). இப்படம் ஜெயலலிதாவின் 100 ஆவது படம்.

பெயரில்லா சொன்னது…

ஆர்பரிக்கும் மனதை அமைதியாக்கும் இனிய மெட்டுடன் கூடிய அற்புத பாடல் பகிர்விற்கு நன்றி.

Raashid Ahamed சொன்னது…

இந்த பாடலை கேட்கும் போது ஒரு சிலிர்ப்பு ஏற்படுகிறது. சிறுவயதில் இலங்கை வானொலியில் கேட்டது. மனதில் நீங்காமல் இருக்கிறது.

கருத்துரையிடுக