நல்லதொரு இனிமையான பாடல்.
திரைப் படம்: பன்னீர் நதிகள் (1986)
நடிப்பு: சிவகுமார், அமலா, ஜெயஸ்ரீ
இசை: சங்கர் கணேஷ்
இயக்கம்: M பாஸ்கர்
பாடல்: முத்துலிங்கம்
பாடியவர்கள்: K J யேஸுதாஸ்
http://www.divshare.com/download/19433117-5f0
பனி விழும் பருவ நிலா பரதமும் ஆடுதே
சிலையோ சிற்பக் கலையோ
பனி விழும் பருவ நிலா பரதமும் ஆடுதே
சிலையோ சிற்பக் கலையோ
இது என்ன இளமை குலுங்கும் ரதமோ
இதயத்தில் அமுதம் பொழிய வருமோ சுவை தருமோ
எனது விழிகள் கனவில் மிதக்குதே
பனி விழும் பருவ நிலா பரதமும் ஆடுதே
சிலையோ சிற்பக் கலையோ
மாலை பொழுதினில் மாய கதைகளை மை விழி சொல்கிறதே
மாறன் விடும் பூங்கணைகள் மார்பினில் பாயுதே
மாலை பொழுதினில் மாய கதைகளை மை விழி சொல்கிறதே
மாறன் விடும் பூங்கணைகள் மார்பினில் பாயுதே
ரோஜா செண்டுகள் ராஜா வண்டுடன் சேர்ந்திடும் நேரம் இது
நாளோர் சிற்றிடை காதல் முத்திரை காண்பது எப்பொழுது
அடடா மெல்ல தொடவா என்னை அழைக்கிறதே உயிரோவியம்
பனி விழும் பருவ நிலா பரதமும் ஆடுதே
சிலையோ சிற்பக் கலையோ
கொஞ்சும் சலங்கைகள் சந்தம் படிக்குது வஞ்சியின் பாதத்திலே
கோவைப் பழம் பழுக்க கண்டேன் குமரியின் உதட்டிலே
கொஞ்சும் சலங்கைகள் சந்தம் படிக்குது வஞ்சியின் பாதத்திலே
கோவைப் பழம் பழுக்க கண்டேன் குமரியின் உதட்டிலே
பாதம் பட்டதும் பாறைக் கற்களும் பூமழை சிந்துமடி
பார்வை பட்டதும் பாலை மண்ணிலும் தென்றலும் வீசுமடி
மயிலே அந்தி வெயிலே உந்தன் மலர் உடலோ பிருந்தாவனம்
பனி விழும் பருவ நிலா பரதமும் ஆடுதே
சிலையோ சிற்பக் கலையோ
இது என்ன இளமை குலுங்கும் ரதமோ
இதயத்தில் அமுதம் பொழிய வருமோ சுவை தருமோ
எனது விழிகள் கனவில் மிதக்குதே
பனி விழும் பருவ நிலா பரதமும் ஆடுதே
சிலையோ சிற்பக் கலையோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக