மீண்டும் ஒரு சுற்றில் புரட்சி தலைவரின் பாடலுக்கு வந்திருக்கிறோம். இவரது பாடல்களில் P சுசீலா அம்மா மற்றும் டி எம் ஸ் அவர்களின் பங்கு குறிப்பிடத் தக்கது. இது போன்ற பல, மனதை வருடும் இதமான அழகானப் பாடல்கள் அவரின் திரைப் படங்களை அலங்கரித்தன.
திரைப் படம்: தொழிலாளி (1964)
இயக்கம்: M A திருமுகம்
இசை: K V மகாதேவன்
பாடல்: மாயவ நாதன்
நடிப்பு: எம் ஜி யார், ரத்னா, K R விஜயா
http://www.divshare.com/download/15019299-768
இந்த படத்தின் நாயகி ரத்னா அவர்களின் சமீபத்திய படம். இவர் பழம்பெரும் நடிகை G வரலக்ஷ்மியின் (மயக்கும் மாலை பொழுதே நீ போ போ- குலேபகாவலி நினைவிருக்கிறதா) மகளாவார். நன்றி-சுக்ரவதனீ.
வருக வருக திருமகளின் முதல் மகளே
நீ வாழ்க வாழ்க கலை மகளின் தலை மகனே
வருக வருக தேடி வந்த செல்வமே
நீ வாழ்க வாழ்க தெய்வம் போல என்றுமே
வருக வருக திருமகளின் முதல் மகளே
நீ வாழ்க வாழ்க கலை மகளின் தலை மகனே
வருக வருக தேடி வந்த செல்வமே
நீ வாழ்க வாழ்க தெய்வம் போல என்றுமே
வருக வருக திருமகளின் முதல் மகளே
தென்றல்தனைத் துணைக்கழைத்து மெல்ல மெல்ல அடியெடுத்து
இன்னும் கொஞ்சம் நெருங்கி வந்தால் போதும்
தென்றல்தனைத் துணைக்கழைத்து மெல்ல மெல்ல அடியெடுத்து
இன்னும் கொஞ்சம் நெருங்கி வந்தால் போதும்
ஆ ஆ ஆ ஆ ஆ
தமிழ் மண்ணில் பிறந்து வந்த மங்கை என்ற காரணத்தால்
என்னை வந்து தடுக்குதைய்யா நானம்
தமிழ் மண்ணில் பிறந்து வந்த மங்கை என்ற காரணத்தால்
என்னை வந்து தடுக்குதைய்யா நானம்
வருக வருக திருமகளின் முதல் மகளே
கையிரெண்டில் உனை அணைத்து கண்ணிரெண்டில் விருந்து வைத்து
கற்பனையில் மிதப்பதும் ஓர் அழகுதான்
கையிரெண்டில் உனை அணைத்து கண்ணிரெண்டில் விருந்து வைத்து
கற்பனையில் மிதப்பதும் ஓர் அழகுதான்
ஆ ஆ ஆ ஆ ஆ
செம்பவள இதழ் வெடித்து சிந்துகின்ற மலரெடுத்து
சேர்த்து வைத்து தொடுப்பதுவும் அழகுதான்
வருக வருக திருமகளின் முதல் மகளே
நீ வாழ்க வாழ்க கலை மகளின் தலை மகனே
வருக வருக தேடி வந்த செல்வமே
நீ வாழ்க வாழ்க தெய்வம் போல என்றுமே
வருக வருக திருமகளின் முதல் மகளே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
1 கருத்து:
தென்றலைப் போல இனிமையான பாடல் பகிர்வுக்கு நன்றி சார் !
தொடர வாழ்த்துக்கள்...
என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?
கருத்துரையிடுக