நல்ல கவித்துவமான பாடல். மேற்கத்திய இசையை தேவையான இடத்தில் புகுத்தி இனிமையான குரல்களைக் கொண்டு பாடவைத்து இனிமைக்கு இனிமை சேர்த்திருக்கிறார்கள்.
திரைப் படம்: என் கடமை (1964)
நடிப்பு: எம் ஜி ஆர், சரோஜா தேவி
இயக்கம்: எம் நடேசன்
இசை: M S விஸ்வனாதன், T K ராம மூர்த்தி
பாடல்: இந்த படத்தின் எல்லா பாடல்களும் கண்ணதாசனால் எழுதப் பட்டவை. இதுவும் அவராகத் தான் இருக்கனும். திரு நாகராஜன் தெளிவுபடுத்தவேண்டும்.
http://asoktamil.opendrive.com/files/Nl8xNjM2MjI4NV9pc2o0cl81MGMy/yaarathu%20yaarathu.mp3
யாரது யாரது தங்கமா
பேரெது பேரெது வைரமா
ஊரெது ஊரெது சொர்கமா
ஊறிடும் தேன் அது வெட்கமா
யாரது யாரது சிங்கமா
ம்
பேரெது பேரெது செல்வமா
ஆஹா
ஊரெது ஊரெது வீரமா
ஊறிடும் தேன் அதன் சாரமா
யாரது யாரது தங்கமா
பேரெது பேரெது செல்வமா
1 2 3 1 2 3
ல ல லம்பம் ல ல லம்பம்
ல ல லம்பம் ல ல லம்பம்
ல ல லம்பம் ல ல லம்பம்
ல ல லம்பம் ல ல லம்பம்
கல்லூறும் மலரென்ன பெண்ணானதோ
கரு நாவல் பழம் என்ன கண்ணானதோ
கல்லூறும் மலரென்ன பெண்ணானதோ
கரு நாவல் பழம் என்ன கண்ணானதோ
தள்ளாடி தள்ளாடி நடை போடுதோ
தனியாத சுகம் என்னும் தடை போடுதோ
ஆஹா ஓஹோ
ஆஹா ஓஹோ
யாரது யாரது தங்கமா
பேரெது பேரெது செல்வமா
ஊரெது ஊரெது சொர்கமா
ஊறிடும் தேன் அதன் சாரமா
யாரது யாரது தங்கமா
123 123
முதிராத கனியென்ன முகமானதோ
முளைக்காத கரும்பென்ன மொழியானதோ
முதிராத கனியென்ன முகமானதோ
முளைக்காத கரும்பென்ன மொழியானதோ
சிதராத முத்தென்ன நகையானதோ
சிங்கார ரசம் எந்தன் துணையானதோ
யாரது யாரது தங்கமா
அனைத்தாலும் அனையாத தீபம் என்ன
அழித்தாலும் அழியாத எண்ணம் என்ன
மறைத்தாலும் மறையாத மாயம் என்ன
மழைப்போல பொழிகின்ற இன்பம் என்ன
ஆறாது ஆறாது ஆசை வெள்ளம்
அடங்காது அடங்காது காதல் உள்ளம்
தீராது தீராது சேரும் இன்பம்
தெளியாது தெளியாது இருவர் உள்ளம்
யாரது யாரது தங்கமா
பேரெது பேரெது செல்வமா
யாரது யாரது தங்கமா
2 கருத்துகள்:
அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கண்ணதாசன்தான்.
அருமை...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…
கருத்துரையிடுக