ஒரு சினிமா பைத்தியம் எப்படி சினிமா, சினிமா என்று அலைந்து கேடு கெட்டு போனாள் என்பது இந்த படம் பார்த்தால் புரியும். அழகானப் பாடல்.
திரைப் படம்: சினிமா பைத்தியம்
இசை: சங்கர் கணேஷ் (விஸ்வனாதன்???)
நடிப்பு: ஜெய்ஷங்கர், கமல், ஜெயசித்ரா
இயக்கம்: முக்தா வீ ஸ்ரீனிவாசன்
குரல்: வாணி ஜெயராம்
http://www.divshare.com/download/19446054-05f
என் உள்ளம் அழகான வெள்ளித் திரை
என் உள்ளம் அழகான வெள்ளித் திரை
அதில் உன் வண்ணமே பொன்னோவியம்
நிழல் ஆடும் படம் என்றும் நீ அல்லவா
என் உள்ளம் அழகான வெள்ளித் திரை
கண்ணாடி திருமேனி அவன் தந்தது
நீ கண் வைத்து பாராமல் துயர் கொண்டது
கண்ணாடி திருமேனி அவன் தந்தது
நீ கண் வைத்து பாராமல் துயர் கொண்டது
பொன் மஞ்சள் பூந்தேகம் பொன் போன்றது
அது பொழிகின்றது உன்னை வலம் வந்தது
என் உள்ளம் அழகான வெள்ளித் திரை
அதில் உன் வண்ணமே பொன்னோவியம்
நிழல் ஆடும் படம் என்றும் நீ அல்லவா
என் உள்ளம் அழகான வெள்ளித் திரை
இதமான இதழ் உண்டு படம் போடவே
தினம் இசை கூட்டும் இடை உண்டு ஒலி கேட்கவே
இதமான இதழ் உண்டு படம் போடவே
தினம் இசை கூட்டும் இடை உண்டு ஒலி கேட்கவே
பனிகின்ற முகம் உண்டு ஒளி பார்க்கவே
பனிகின்ற முகம் உண்டு ஒளி பார்க்கவே
நீ கதை நாயகன் மங்கை கதை நாயகி
நீ கதை நாயகன் மங்கை கதை நாயகி
என் உள்ளம் அழகான வெள்ளித் திரை
அதில் உன் வண்ணமே பொன்னோவியம்
நிழல் ஆடும் படம் என்றும் நீ அல்லவா
என் உள்ளம் அழகான வெள்ளித் திரை
1 கருத்து:
இசை ஷங்கர் கணேஷ்தான். பாடல் கண்ணதாசன்
கருத்துரையிடுக