பின்பற்றுபவர்கள்

புதன், 29 ஆகஸ்ட், 2012

அடி யாரது யாரது அங்கே என் காதல் தேவதையா


மனோ பாடல்களில் ஒரு அழகானப் பாடல். சித்ரா பற்றி சொல்லவே வேண்டாம்.
அரபி இசையின் பின்னனி இனிமை.

திரைப் படம்: மேட்டுகுடி (1996)
இசை: சிற்பி
பாடியவர்கள்: மனோ, K S சித்ரா
நடிப்பு: கார்த்திக், நக்மா
இயக்கம்: சுந்தர் C
பாடல்: வாலி அல்லது G தூயவன்http://www.divshare.com/download/19446192-2dfலல ல ல லல ல ல ஹா  ஹா
அடி யாரது யாரது அங்கே
என் காதல் தேவதையா
பறி போனது போனது நெஞ்சம்
இது வாலிப சோதனையா

அடி யாரது யாரது அங்கே
என் காதல் தேவதையா
பறி போனது போனது நெஞ்சம்
இது வாலிப சோதனையா

பனி ரோஜா தோட்டம்தான் ஒரு சேலை கட்டியதா
அட உந்தன் கண் இன்று என் மேலே ஒட்டியதா
நீ கனவா கற்பனையா
அட இன்னும் தெரியலையா
ஓ ஓ ஓ ஓ
அடி யாரது யாரது அங்கே
என் காதல் தேவதையா
பறி போனது போனது நெஞ்சம்
இது வாலிப சோதனையா

என் சேலை சோலைக்குள் முதல் பூவை பறித்தாயே
என்னை மிச்சம் இல்லாமல் நீ அள்ளிக் குடித்தாயே

முதல் பார்வையிலே என்னை நீ கொள்ளை அடித்தாயே
என் உள்ளம் முழுவதிலும் புது வெள்ளை அடித்தாயே
நீ மலரில் பிறந்தவளா
இல்லை நிலவில் வளர்ந்தவளா
அந்த காமன் வீட்டுக்கு
ஒரு ஜன்னல் திறந்தவளா

அட இன்னும் தெரியலையா
நான் உந்தன் துணையில்லையா
ஓ ஓ ஓ ஓ
அடி யாரது யாரது அங்கே
என் காதல் தேவதையா
பறி போனது போனது நெஞ்சம்
இது வாலிப சோதனையா

ஒரு சிற்பியில் முத்தைப் போல் என்னை மூடிக் கொள்வாயா
உன் அழகில் தொலைந்தவனை நீ தேடித் தருவாயா

உன் கனவில் நனைகின்றேன் நீ கொடிகள் தருவாயா
நான் கொஞ்சம் தூங்குகிறேன் நீ தலையனை ஆவாயா

நீ காதல் ஓவியனா
ஒரு கவிதை நாயகனா
நான் தேடும் மன்மதனா
என் அழகின் காவலனா

அட போதும் அம்மம்மா நாம் கைகள் இணைவோமா
ஓ ஓ ஓ ஓ

அடி யாரது யாரது அங்கே
என் காதல் தேவதையா
பறி போனது போனது நெஞ்சம்
இது வாலிப சோதனையா

அடி யாரது யாரது அங்கே
என் காதல் தேவதையா
பறி போனது போனது நெஞ்சம்
இது வாலிப சோதனையா

பனி ரோஜா தோட்டம்தான் ஒரு சேலை கட்டியதா
அட உந்தன் கண் இன்று என் மேலே ஒட்டியதா
நீ கனவா கற்பனையா
அட இன்னும் தெரியலையா
ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பாடலை பல முறை கேட்டதுண்டு...

வரிகளை இப்போது தான் வாசிக்கிறேன்...

நன்றி சார்... வாழ்த்துக்கள்...

கருத்துரையிடுக