பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 11 ஏப்ரல், 2014

நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை

இசையும், பாடலும், குரலும், பின்னணி இசை கொடுத்தவர்களும் இவர்கள் அனைவரும் என ஒருவரும் குறை வைக்காமல் வழங்கியிருக்கும் பாடல். நடிப்பும் இனிமையாகவும் இயற்கையாகவும் அமைந்த ஒரு பாடல்.

எம் ஜி யார் படத்தில் பாடல்களை பற்றிய அவரது அக்கறையை  சொல்லத் தேவையில்லை. எல்லா பாடல்களும் சிறப்பாய் வந்தால்தான் ஏற்றுக் கொள்வார்.

"ஆவித் துடித்தது நானுமழைத்தேன் நீயும் வந்தாய் என் பாட்டுக்குள்ளே

ஆவித் துடித்தது நானும் அழைத்தேன் நீயும் வந்தாய் என் பாட்டுக்குள்ளே"

இந்த வரிகள் மட்டுமே பாடலின் தரத்தை உணர்த்திவிடுகிறது.


திரைப் படம்: படகோட்டி (1964)
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
பாடல்: வாலி
பாடியவர்கள்: டி எம் எஸ்
நடிப்பு: எம் ஜி யார், சரோஜா தேவி
இயக்கம்: T பிரகாஷ்ராவ்




http://asoktamil.opendrive.com/files/Nl8zNTUyNTg3OV9VQ1IyaV8zMjM5/naan%20oru%20kuzhandai.mp3










நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை

ஒருவர் மடியிலே ஒருவரடி

நாளொரு மேனி பொழுதொரு வண்ணம்

ஒருவர் மனதிலே ஒருவரடி

நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை

ஒருவர் மடியிலே ஒருவரடி

நாளொரு மேனி பொழுதொரு வண்ணம்

ஒருவர் மனதிலே ஒருவரடி



நேற்றொரு தோற்றம் இன்றொரு மாற்றம்

பார்த்தால் பார்வைக்கு தெரியாது

நேற்றொரு தோற்றம் இன்றொரு மாற்றம்

பார்த்தால் பார்வைக்கு தெரியாது

தொடங்கிய பாதையில் தொடர்ந்து வராமல்

தூரத்தில் நின்றால் புரியாது

தொடங்கிய பாதையில் தொடர்ந்து வராமல்

தூரத்தில் நின்றால் புரியாது

பவளக் கொடியே வா

சிந்தாமணியே வா

மணிமேகலையே வா

மங்கம்மாவே வா

நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை

ஒருவர் மடியிலே ஒருவரடி

நாளொரு மேனி பொழுதொரு வண்ணம்

ஒருவர் மனதிலே ஒருவரடி


ஊரறியாமல் உறவறியாமல்

யார் வரச் சொன்னார் காட்டுக்குள்ளே

ஓடிய கால்களை ஓடவிடாமல்

யார் தடுத்தார் உன்னை வீட்டுக்குள்ளே

ஆவித் துடித்தது நானுமழைத்தேன்

நீயும் வந்தாய் என் பாட்டுக்குள்ளே

ஆவித் துடித்தது நானும் அழைத்தேன்

நீயும் வந்தாய் என் பாட்டுக்குள்ளே

பவளக் கொடியே வா

சிந்தாமணியே வா

மணிமேகலையே வா

மங்கம்மாவே வா

நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை

ஒருவர் மடியிலே ஒருவரடி

நாளொரு மேனி பொழுதொரு வண்ணம்

ஒருவர் மனதிலே ஒருவரடி

1 கருத்து:

கருத்துரையிடுக