பின்பற்றுபவர்கள்

புதன், 18 ஜூன், 2014

கால்கள் நின்றது நின்றதுதான்

L R ஈஸ்வரி அவர்களின் அமுதமான குரலில் வந்த பாடல்களில் இதுவும் ஒன்று. வாலியின் கவிதையும் மன்னர்களின் இசையும் இணைந்து விருந்து படைத்துள்ளது.


திரைப் படம்: பூஜைக்கு வந்த மலர் (1965)
 இசை: M S விஸ்வநாதன், T K ராமமூர்த்தி
 பாடியவர்கள்: A L ராகவன், L R ஈஸ்வரி
 பாடல்: வாலி
நடிப்பு: ஜெமினி, விஜயகுமாரி, சாவித்திரி, முத்துராமன்













கால்கள் நின்றது நின்றதுதான்
கண்கள் சென்றது சென்றதுதான்
உருவம் வந்தது வந்ததுதான்
உள்ளம் தந்தது தந்ததுதான் 
கன்னம் சிவந்தது சிவந்ததுதான்
கற்பனை பிறந்தது பிறந்ததுதான்
கன்னம் சிவந்தது சிவந்ததுதான்
கற்பனை பிறந்தது பிறந்ததுதான்
எண்ணம் பறந்தது பறந்ததுதான்
என்னை மறந்தது மறந்ததுதான் 
பூ மழை பெய்யும் சோலையிலே
பனி மழை பெய்யும் மாலையிலே
பூ மழை பெய்யும் சோலையிலே
பனி மழை பெய்யும் மாலையிலே
நால்விழி மயங்கும் உறவினிலே
நாடகம் நடக்கும் தனிமையிலே
நால்விழி மயங்கும் உறவினிலே
நாடகம் நடக்கும் தனிமையிலே
நாடகம் நடக்கும் தனிமையிலே 
காற்றடித்தால் அங்கு ஓசை வரும்
கைபிடித்தால் அங்கு ஆசை வரும்
காதல் வந்தால் அங்கு கனி மலரும்
கண் மலர்ந்தால் அங்கு கதை முடியும் 
கால்கள் நின்றது நின்றதுதான் 
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

கைகளை பிடித்தவன் காதலனோ
கவிதைகள் படிப்பவன் பாவலனோ
கண்களில் நின்றவன் மன்மதனோ 
கன்னியை வென்றவன் மன்னவனோ

ஊர்வலமாய் வரும் பூந்தேரோ
உள்ளத்தில் பாயும் தேனாறோ
இதழ்களில் வடிவது குறுநகையோ
இதயம் எழுதிய சிறுகதையோ
இதழ்களில் வடிவது குறுநகையோ
இதயம் எழுதிய சிறுகதையோ


கால்கள் நின்றது நின்றதுதான்
ஹாஹா 
கண்கள் சென்றது சென்றதுதான்
ஹோ ஹோ
உருவம் வந்தது வந்ததுதான்
ஆ ஆ 
உள்ளம் தந்தது தந்ததுதான் 
கால்கள் நின்றது நின்றதுதான்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ 
ஓ ஓ ஓ ஓ ஓ






2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஆகா...! வாலி அவர்களின் வரிகள்...!

TSK சொன்னது…

நடிகர்கள்:- முத்துராமன், மணிமாலா.

கருத்துரையிடுக