பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 24 ஜூன், 2014

காவேரி ஓரம் கவி சொன்ன காதல்

உணர்ச்சிமயமான பாடல். மனதை நெருடும் பாடல். ஆழ்ந்த அர்த்தமுள்ள கவிதை வரிகள். எனக்குப பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. P சுசீலா அம்மாவின் குரல் அப்படியே காட்சிக்கு ஒன்றிப் போனது.

திரைப்படம்: ஆடிப் பெருக்கு (1962)
இசை: A M ராஜா
பாடியவர்: P சுசீலா
நடிப்பு: ஜெமினி, சரோஜா தேவி
இயக்கம்: K சங்கர்
பாடல்: கண்ணதாசன்













காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா

உள்ளம் அலை மோதும் நிலை கூறவா

அந்த கனிவான பாடல் முடிவாகும் முன்னே
கனவான கதை கூறவா

பொங்கும் விழி நீரை அணை போடவா

காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா

உள்ளம் அலை மோதும் நிலை கூறவா


பொருளோடு வாழ்வு உருவாகும் போது
புகழ் பாட பலர் கூடுவார்

அந்த புகழ் போதையாலே
எளியோரின் வாழ்வை
மதியாமல் உரையாடுவார்

ஏழை விதியோடு விளையாடுவார்
அன்பை மலிவாக எடை போடுவார்

என்ற கனிவான பாடல் முடிவாகும் முன்னே
கனவான கதை கூறவா

பொங்கும் விழி நீரை
அணை போடவா

காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா

உள்ளம் அலை மோதும் நிலை கூறவா


அழியாது காதல் நிலையானதென்று
அழகான கவி பாடுவார்

வாழ்வில் வளமான மங்கை
பொருளோடு வந்தால்
மனமாறி உறவாடுவார்

கொஞ்சும் மொழி பேசி வலை வீசுவார்

தன்னை எளிதாக விலை பேசுவார்

என்ற கனிவான பாடல் முடிவாகும் முன்னே
கனவான கதை கூறவா

பொங்கும் விழி நீரை
அணை போடவா

காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா

உள்ளம் அலை மோதும் நிலை கூறவா

2 கருத்துகள்:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
மிக அருமையான பாடல் கேட்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மனதை நெகிழ வைக்கும் பாடல்...

கருத்துரையிடுக