பின்பற்றுபவர்கள்

வியாழன், 26 ஜூன், 2014

இளமையின் நினைவுகள் ஆயிரம்

பாடல் இனிமை.
இசை சந்திர போஸ்தானா? இசையின் போக்கை பார்த்தால் சங்கர் கணேஷ் போல தெரிகிறது. எது எப்படியோ நல்ல பாடல். பாடல் காணொளி இப்போதுதான் கிடைத்தது.

திரைப்படம்: செல்வாக்கு (1986)
இசை: சந்திரபோஸ் (சங்கர் கணேஷ்???)
பாடியவர்கள்: ஜெயசந்திரன், வாணி ஜெயராம்
இயக்கம்: M A காஜா
நடிப்பு: சந்திரசேகர், சுலக்ஷ்னா.











இளமையின் நினைவுகள் ஆயிரம்
மனதினில் எழுதிய ஓவியம்
இரவே நிலவே எந்தன் ஆலையம்
தலைவன் வருவான் நெஞ்சில் ஊர்வலம்

இளமையின் நினைவுகள் ஆயிரம்
மலர்களில் எழுதிய ஓவியம்

ரதியே
காமன் தோள் சேரும் கிளியே
அழகே
ஆடும் பொன் வீணை நீ

இதழோ
காதல் தேனாற்றங்கரையோ
இளமை
மேகம் நீர் ஊற்றும் நாள்

ஆடும் தோளோடு தோள் சேர
பால் ஊற்றும் நிலவே

இளமையின் நினைவுகள் ஆயிரம்
மலர்களில் எழுதிய ஓவியம்

கனவே
ஆசை பூங்காற்றின் சுகமே
மனமே
சூடும் பூ மாலை நீ

மடி மேல்
ஆடும் பூந்தோட்டம் முகமோ
இதயம்
பாடும் பூபாளம் நீ

மேனி தானாக தீயாகி
போராடும் தலைவா

இளமையின் நினைவுகள் ஆயிரம்
மலர்களில் எழுதிய ஓவியம்
இரவே நிலவே எந்தன் ஆலையம்
தலைவன் வருவான் நெஞ்சில் ஊர்வலம்

ல ல ல ல ல ல ல ல ல ல
ல ல ல ல ல ல ல ல ல ல

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

புதிய பாடல்... நன்றி...

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
பாடலை இரசித்தேன்...

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கருத்துரையிடுக