பின்பற்றுபவர்கள்

வியாழன், 17 ஜூன், 2010

பூத்திருக்கும் விழி எடுத்து மாலை தொடுக்கவா

மற்றுமொரு இன்னிசை பாடல். இந்தப் பாடலில் ரவிச்சந்திரனுடன் இணைந்திருப்பவர் திரு சிவந்தி ஆதித்தனின் இரண்டாவது மனைவி மாலதி எனக் கேள்விப் பட்டேன். உண்மையா என்பது தெரியவில்லை.


திரைப் படம்:   முத்து மண்டபம் (1962)

இயக்கம்: ASA சாமி

இசை: R பார்த்தசாரதி

குரல்கள்: P B ஸ்ரீனிவாஸ், P சுசீலா

நடிப்பு: S S R, விஜயகுமாரி

பாடல்:  தெள்ளூர் மு தருமராசன்



http://www.divshare.com/download/11726163-8a2



ம் ஹு ஹும்

பூத்திருக்கும் விழி எடுத்து மாலை தொடுக்கவா...

பூத்திருக்கும் விழி எடுத்து மாலை தொடுக்கவா...

புன்னகையில் செண்டமைத்து கையில் கொடுக்கவா...

புன்னகையில் செண்டமைத்து கையில் கொடுக்கவா...

பூத்திருக்கும் விழி எடுத்து மாலை தொடுக்கவா...

மாங்கனியின் தீஞ்சுவையை இதழிரண்டில் தரலாமா..

மாதுளையை பிளந்தெடுத்தே காதலை அளந்து தரலாமா...

தேன் மதுர செவியினிலே மணியாய் ஒலிக்கவா..

செம்பவள நாவினிலே தேனாய் இனிக்கவா...

தேன் மதுர செவியினிலே மணியாய் ஒலிக்கவா..

பனித்துளியின் மொழியினிலே படையெடுத்தாள் தளிர் கொடியே...

அமுத இசை மயக்குதடி அருகினில் இனிமை சுரக்குதடி...


ஆசை முகம் அருகிருந்தால் ஆவல் தனியுமா...

அன்பு வெள்ளம் கரை கடந்தால் இன்பம் குறையுமா..

ஆசை முகம் அருகிருந்தால் ஆவல் தனியுமா...

1 கருத்து:

Unknown சொன்னது…

அற்புதமான வரிகள் அர்த்தமுள்ள பாடல்



கருத்துரையிடுக