பின்பற்றுபவர்கள்

சனி, 3 ஜூலை, 2010

பட்டிலும் மெல்லிய பெண்ணிது...தொட்டதும் மெல்லிடை துள்ளுது...

இசையும் கவிதையும் குரல்களும்....


திரைப் படம்: யாரும் தங்கலாம் அல்லது ஞாயிறும் திங்களும் (1965)


இசை: M S விஸ்வனாதன்.

இயக்கம்: சித்ராலயாவின் ஸ்ரீதர்

பாடல்: கண்ணதாசன்

பாடியவர்கள்: TMS,  சுசீலா





Embed Music - Listen Audio Files -




பட்டிலும் மெல்லிய பெண்ணிது...
தொட்டதும் மெல்லிடை துள்ளுது...
தட்டிய தங்கத்தில் செய்தது..
தாமரை பூவினில் நெய்தது...

பட்டிலும் மெல்லிய பெண்ணிது...
தொட்டதும் மெல்லிடை துள்ளுது...
தட்டிய தங்கத்தில் செய்தது..
தாமரை பூவினில் நெய்தது...

வெண்ணிலாவின் சாறு கொண்டு...
வெள்ளிக்கிண்ணம் நூறுகொண்டு...

வெண்ணிலாவின் சாறு கொண்டு...
வெள்ளிக்கிண்ணம் நூறுகொண்டு...

பெண்ணுலாவ வந்ததென்று
பேச வந்த வார்த்தை என்ன...

ஒன்று கேட்டு ஒன்று தந்து
ஓடம் போகும் ஆறு கண்டு...

ஒன்று கேட்டு ஒன்று தந்து
ஓடம் போகும் ஆறு கண்டு...

தென்றல் போகும் பாதை எங்கும்
சேர்ந்து போக ஆசை உண்டு...

பட்டிலும் மெல்லிய பெண்ணிது...
தொட்டதும் மெல்லிடை துள்ளுது...
தட்டிய தங்கத்தில் செய்தது..
தாமரை பூவினில் நெய்தது...

பூ மலர்ந்த காலம் தொட்டு...
பொங்கி வந்த தேனை அள்ளி..

பூ மலர்ந்த காலம் தொட்டு...
பொங்கி வந்த தேனை அள்ளி..

நீ அருந்த வேண்டும் என்று..
நெஞ்சம் கொண்டு வந்ததின்று...

இன்று போக நாளை உண்டு...
என்றும் இந்த காதல் உண்டு...

இன்று போக நாளை உண்டு...
என்றும் இந்த காதல் உண்டு...

நின்று போகும் வெள்ளம் அல்ல
நினைவு மாறும் உள்ளம் அல்ல...


பட்டிலும் மெல்லிய பெண்ணிது...
தொட்டதும் மெல்லிடை துள்ளுது...

தட்டிய தங்கத்தில் செய்தது..
தாமரை பூவினில் நெய்தது...

அ ஆகா ஆ ஆ ஆ லல் லலா லாலா

1 கருத்து:

அப்பாதுரை சொன்னது…

இந்தப் படம் தேனும் பாலும் என்று நினைக்கிறேன்.
சிவாஜி, தேவிகா, பத்மினி என்று ஞாபகம்..

கருத்துரையிடுக