பின்பற்றுபவர்கள்

திங்கள், 30 ஜூலை, 2012

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே

மெல்லிய பூங்காற்றுடன் மெல்லிய இசையும், மென்மை குரல்களும் அலுக்காமல் கேட்கலாம்.

திரைப் படம்: வண்டிக் காரன் மகன் (1978)

பாடல்: வாலி
குரல்கள்: S P B, வாணி ஜெயராம்
இசை: M S விஸ்வனாதன்
இயக்கம்: அமிர்தம்



Embed Music Files - Free Audio -







http://youtu.be/FOTZBmDgARo









மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே

நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே

நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே

மேனகை போலொரு புன்னகை புது பாட்டே

உன் மேனியின் சாயலோ ஆனந்த நீரூற்றே

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே

நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே



பழுக்க பழுக்க ரசம் பிழிய பிழிய பழம்

உள்ளூர கள்ளூர தள்ளாடுமோ

பழுக்க பழுக்க ரசம் பிழிய பிழிய பழம்

உள்ளூர கள்ளூர தள்ளாடுமோ

குடிக்க குடிக்க மனம் மிதக்க மிதக்க தினம்

வண்டாட்டம் கொண்டாட்டம் உண்டாகுமோ

ஓடை மீனாட

ஓடை நீர் வேண்டும்

உறவில் நான் ஆட

ஒருவன் நீ வேண்டும்

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே

நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே



லா லா ல ல ல ஹா ல ல ல ல ல ல் ல் ல ல ல ல
லா லா ல ல ல

ஒடிய ஒடிய இடை நெளிய நெளிய நடை

உல்லாச பல்லாக்கில் ஊர்கோலமோ

ஒடிய ஒடிய இடை நெளிய நெளிய நடை

உல்லாச பல்லாக்கில் ஊர்கோலமோ

நெருங்க நெருங்க மெல்ல ஒதுங்க ஒதுங்க இன்னும்

ஊடல்கள் யுவராணி ஒய்யாரமோ

மாலை இடலாமோ

மஞ்சம் வரலாமோ

சேலை தொடலாமோ

கைகள் படலாமோ

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே

நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே



நழுவ நழுவ என்னை தழுவ தழுவ வரும்

வித்தைகள் கன்னா உன் வெள்ளோட்டமோ



மயக்கி மயக்கி பின்பு மறைத்து மறைத்து வைத்தல்

அன்பே உன் செல்வாக்கின் அடையாளமோ



காதல் விளையாட

காவல் கிடையாதோ

காவல் தடைப்போட்டால்

ஆவல் மீறாதோ



மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே

நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மாலை நேரத்தில், அமைதியான சூழ்நிலையில் இந்தப் பாடலை கேட்பதற்கு அருமையாக இருக்கும்.

பகிர்வுக்கு நன்றி சார் !



பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)

பெயரில்லா சொன்னது…

சார்... இதுலயும் ஒரு கிக் பாட்டு உள்ளது படுத்தாள் புரண்டாள்.. பாடலைப் எப்போது கேட்டாலும் இனிமையாக இருக்கும். இந்த இரண்டு பாடலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல் என்றால் மிகையாகாது. முடிந்தால் அந்த பாடலையும் போடுங்கள்.

கருத்துரையிடுக