பின்பற்றுபவர்கள்

புதன், 1 ஆகஸ்ட், 2012

பூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா

வழக்கமான இனிய ஜெயசந்திரன் குரல் தேனொழுகும் சுனந்தா குரலுடன். பாடலின் ஒரு சில வரிகளில் ஒரு vibration இருப்பதை கவனியுங்கள். இனிமை.


திரைப் படம்:என் புருசந்தான் எனக்கு மட்டும்தான் (1989)
இயக்கம்: மனோபாலா
நடிப்பு: விஜயகாந்த், சுஹாஸினி, ரேகா
இசை: இளையராஜா







பூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா

புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா

தீர்த்தக் கரைதனில் காதல் மயக்கங்கள் தீரும் வரையினில் புது வசந்த விழா

பூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா

புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா

ஓம் மாங்கல்யம் தந்துனா நென

மமஜீவன ஹெதுனா

கந்தெ பத்ரானி ஷுபகே

த்வம் தீய ஷரதம் ஷுபம்

மீட்டாமல் போனால் மணி வீணை வாடும்

கைதீண்டினால்தான் கல்யாணி பாடும்

எழுதாத புது இலக்கியம் உயிர் காதலில் விளையும்

இதழோடு இதழ் இணைந்திட இசைக் கோலங்கள் வரையும்

மேளம் முழங்கவும் மாலை வழங்கவும் வேளை வருகையிலே

பாயை விரித்திடும் பாட்டு படித்திடும் கான கருங்குயிலே

ஆசை குளத்தினில் நீந்தி குளிக்கையில் ஆனந்த பூஜை தொடங்குமோ

பூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா

புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா

தீர்த்தக் கரைதனில் காதல் மயக்கங்கள் தீரும் வரையினில் புது வசந்த விழா

பூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா

புன்னகையில் பாடெழுதும் வண்ணப் புறா

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

கஸ்தூரி மானை கடன் கேட்டு வாங்கி

நான் கொண்ட கண்கள் நாளாச்சி தூங்கி

நிறுத்தாமல் மலர் கணைகளை விடும் வாலிபம் இதுதான்

அரங்கேற தினம் இரவினில் வரும் நாடகம் இதுதான்

பிள்ளை பிறந்ததும் பள்ளியறைக் கொஞ்சம் மூடிக் கிடக்கட்டுமே

கட்டில் ஒரு புறம் தொட்டில் ஒரு புறம் ஆடிக் கிடக்கட்டுமே

மூச்சு இருக்கின்ற காலம் வரையினில் மோகத்தின் வேகம் குறையுமோ

பூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா

புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா

தீர்த்தக் கரைதனில் காதல் மயக்கங்கள் தீரும் வரையினில் புது வசந்த விழா

பூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா

புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமையான வரிகள்... நன்றி சார்...

சின்ன வேண்டுகோள் : இந்த உலவு லோகோ அல்லது ஓட்டுப்பட்டையை எடுத்து விடவும். உங்கள் தளம் திறக்க ரொம்ப நேரம் (more than 10 minutes) ஆகிறது....


மேலும் விவரங்களுக்கு இங்கே (http://www.bloggernanban.com/2012/06/remove-ulavu-vote-buttons.html) சென்று பார்க்கவும். நன்றி !

கருத்துரையிடுக