பின்பற்றுபவர்கள்

புதன், 12 செப்டம்பர், 2012

பூந்தேனில் கலந்து பொன்வண்டு எழுந்து


ஷோபாவின் இனிமையான நடிப்பில் அழகான திரைப் படம். K V மகாதேவன் தனது இறுதி காலங்களில் இசையமைத்தப் படங்களில் இதுவும் ஒன்று. அப்போது அவர் இசையில் வாணி ராணி, எங்கள் தங்க ராஜா ஆகிய படங்களின் இசை தாக்கம் இதில் அதிகமாக இருந்தது.

திரைப் படம்: ஏணி படிகள் (1979)
இசை: K V மகாதேவன்
பாடல்: கண்ணதாசன்
இயக்கம்: ??
நடிப்பு: சிவ குமார், ஷோபா
பூந்தேனில் கலந்து
பொன்வண்டு எழுந்து
ஸங்கீதம் படிப்பதென்ன
தள்ளாடி நடப்பதென்ன

பூந்தேனில் கலந்து
பொன்வண்டு எழுந்து
ஸங்கீதம் படிப்பதென்ன
தள்ளாடி நடப்பதென்ன

ஏறாத ஏணி தனில் ஏறி நடப்பாள்
நல்ல நேரம் வரும்
என்றென்றும் நல்ல புகழ் தன்னை வளர்ப்பாள்
அந்த காலம் வரும்
அவள் ஆரம்ப நிலையிலும் மீனாக ஜொலிப்பால்
கலை வண்ண தாரகை என வருவாள்
அது நடக்கும் என நினைக்கும்
மனம் நாள் பார்த்து தொடங்கி விடும்

பூந்தேனில் கலந்து
பொன்வண்டு எழுந்து
ஸங்கீதம் படிப்பதென்ன
தள்ளாடி நடப்பதென்ன

கட்டான மேனி உண்டு ஆடல் நடத்த
வண்ண தோகை அவள்
ஸங்கீத ஞானம் உண்டு பாடல் நடத்த
வானம்பாடி அவள்
அவள் பூவிழி சிரிப்பினில் பூலோகம் மயங்கும்
பொல்லாத புன்னகை கலங்க வைக்கும்
நல்ல புகழும் பெரும் பொருளும்
அவள் அடைகின்ற காலம் வரும்
பூந்தேனில் கலந்து
பொன்வண்டு எழுந்து
ஸங்கீதம் படிப்பதென்ன
தள்ளாடி நடப்பதென்ன

என்னைத் தன் நாதன் என்று சொல்லி மகிழ்வாள்
அதில் தயக்கம் இல்லை
எப்போதும் என் மடியில் துள்ளி விழுவாள்
மறு விளக்கம் இல்லை
அவள் தான் கொண்ட புகழ்
என்றும் நான் கொண்ட புகழ் தான்
என் நெஞ்சில் வேறெந்த நினைவும் இல்லை
இதில் எனக்கும் ஒரு மயக்கம்
இது என் நாளும் குறைவதில்லை

பூந்தேனில் கலந்து
பொன்வண்டு எழுந்து
ஸங்கீதம் படிப்பதென்ன
தள்ளாடி நடப்பதென்ன
ஆ ஹா ஹா ஆ ஆ

4 கருத்துகள்:

NAGARAJAN சொன்னது…

இயக்குனர் P மாதவன். சிவாஜி கணேசனை வைத்து அதிகமான படங்களை இயக்கியவர் - அவற்றில் பல வெற்றிப்படங்கள். 1975 ல் (டிசம்பர் மாதம்) பாட்டும் பரதமும் என்ற படத்தினை சிவாஜியை வைத்து இயக்கினார். அந்தக்கால சிவாஜி படத்திற்கென உள்ள அனைத்து அம்சம்களும் உள்ள படம்தான். நன்றாக ஓடவில்லை. 1975 அக்டோபர் 2ல் காமராஜர் மறைந்தார். அதுவரை காமராஜுடன் இருந்த சிவாஜி, காமராஜர் மறைந்த உடனே இந்திரா காங்கிரசில் சேர்ந்து விட்டார். இதனை சிவாஜி ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அந்தக் கோபத்தினை அவர் படங்களைப் புறக்கணித்து காட்டி விட்டனர்.

இதன் பிறகு, P மாதவன் சிவாஜியை வைத்து படங்களே இயக்கவில்லை. ஏணிப்படிகள், வீட்டுக்கு வீடு வாசப்படி போன்ற படங்களை (தெலுங்கு ரீமேக் ) இயக்க ஆரம்பித்தார்.

Unknown சொன்னது…

நன்றி திரு நாகராஜன்.

myspb சொன்னது…

இந்த பாடலில் சரணங்களின் மெட்டுக்கள் இனிமையாக இருக்கும் அடிக்கடி நான் கேட்கும் பாடல். நன்றி.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மிகவும் இனிமையான பாடல்... கேட்க கேட்க அலுக்காதது... நன்றி சார்...

கருத்துரையிடுக