பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

சின்னஞ்சிறுக் கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே

பாரதியாரின் இந்தப் பாடலை பல இசையமைப்பாளர்கள் பல திரைபடங்களில் கையாண்டிருந்தாலும் எல்லோரும் பாடலின் சுவை கெடாமல் கொடுத்திருக்கிறார்கள்.
இது மறைந்த பாடகி ஸ்வர்னலதா தமிழிலில் முதன்முதலாக திரைபடத்திற்காக பாடிய பாடல். அழகாக பாடியுள்ளார்.

திரைப் படம்: நீதிக்கு தண்டனை (1987)
இசை: M S விஸ்வனாதன்
இயக்கம்:  S A சந்திரசேகர்
நடிப்பு: நிழல்கள் ரவி, ராதிகா
பாடலை இயற்றியவர்: சுப்ரமணிய பாரதியார்சின்னஞ்சிறுக் கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே
என்னைக் கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்
சின்னஞ்சிறுக் கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே
என்னைக் கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்
சின்னஞ்சிறுக் கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே
செல்வக் களஞ்சியமே

பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா பேசும் பொற் சித்திரமே

அள்ளி அணைத்திடவே என் முன்னே ஆடி வரும் தேனே
தேனே ஆடி வரும் தேனே
சின்னஞ்சிறுக் கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே
செல்வக் களஞ்சியமே

உச்சி தனை முகர்ந்தால் கறுவம் ஓங்கி வளருதடி

மெச்சி உன்னை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி
மேனி சிலிர்க்குதடி
சின்னஞ்சிறுக் கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே
செல்வக் களஞ்சியமே

கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம் தான் கள் வெறி கொள்ளுதடி

உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தம் ஆகுதடி
உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தம் ஆகுதடி

சின்னஞ்சிறுக் கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே
என்னைக் கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்
சின்னஞ்சிறுக் கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே
செல்வக் களஞ்சியமே

3 கருத்துகள்:

NAGARAJAN சொன்னது…

நீதிக்கு தண்டனை படத்திற்கு இசையமைத்தவர் M S விஸ்வநாதன், இளையராஜா அல்ல.

ஸ்வர்ணலதா K J ஜேசுதாசுடன் சேர்ந்து பாடியுள்ளார்.

Unknown சொன்னது…

நாகராஜன் ஸார் தவறு திருத்தப்பட்டது. நன்றி

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமையான பாடல்... நன்றி சார்...

கருத்துரையிடுக