பின்பற்றுபவர்கள்

புதன், 24 அக்டோபர், 2012

வண்ணமலர் பூங்கொடியே வண்டாடும் தேன்குளமே

எங்கள் இல்லத் திருமண நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்த  அனைத்து அன்பர்களுக்கும் நன்றி.

இன்று ஒரு நல்ல இனிமையான பாடலுடன் கிணற்றுத் தவளை தொடர்ந்து செயல்படும் என நம்புகிறேன்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் குரல்களில் ஒரு இனிய காதல் கீதம்.

திரைப்படம்: ஜோதி மலர் (1986)
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம்
இயக்கம்: ராமநாராயணன்
நடிப்பு: சுரேஷ்

http://asoktamil.opendrive.com/files/Nl8xNDQxMjU0OV9NbkRmOF8zZjIz/Vanna%20Malar%20Poongkodiye.mp3வண்ணமலர் பூங்கொடியே வண்டாடும் தேன்குளமே
வண்ணமலர் பூங்கொடியே வண்டாடும் தேன்குளமே
இளந்தளிர் மேனியிலே இன்பம் தரும் பெண்ணமுதே
இளந்தளிர் மேனியிலே இன்பம் தரும் பெண்ணமுதே

வண்ணமலர் பூங்கொடியை வண்டு வந்து தேடுதம்மா
வண்ணமலர் பூங்கொடியை வண்டு வந்து தேடுதம்மா
எண்ணி எண்ணி நான் மகிழ இன்ப சுகம் பொங்குதம்மா
எண்ணி எண்ணி நான் மகிழ இன்ப சுகம் பொங்குதம்மா

வண்ணமலர் பூங்கொடியே

மாதுளம் பூ இதழோ மங்கை உன் செவ்விதழோ
மாதுளம் பூ இதழோ மங்கை உன் செவ்விதழோ
நான் அதை சுவைப்பதற்கு நாணம் தடை போடுவதோ
நான் அதை சுவைப்பதற்கு நாணம் தடை போடுவதோ
வண்ணமலர் பூங்கொடியை வண்டு வந்து தேடுதம்மா
எண்ணி எண்ணி நான் மகிழ இன்ப சுகம் பொங்குதம்மா

வண்ணமலர் பூங்கொடியே

கண்ணிலே பனிப்பார்வை கண்ணா உன் தனிப்பார்வை
கண்ணிலே பனிப்பார்வை கண்ணா உன் தனிப்பார்வை
என் ஆசை அடங்கவில்லை ஏனிந்த மயக்கமோ
என் ஆசை அடங்கவில்லை ஏனிந்த மயக்கமோ

வண்ணமலர் பூங்கொடியே வண்டாடும் தேன்குளமே
இளந்தளிர் மேனியிலே இன்பம் தரும் பெண்ணமுதே
வண்ணமலர் பூங்கொடியே

கை உறவில் மெய் மறக்க காந்தம் என்னை இழுக்குதடி
கை உறவில் மெய் மறக்க காந்தம் என்னை இழுக்குதடி
காதல் இன்பம் பெருகி வர கருவிழி சொருகுதம்மா
காதல் இன்பம் பெருகி வர கருவிழி சொருகுதம்மா

வண்ணமலர் பூங்கொடியே வண்டாடும் தேன்குளமே
இளந்தளிர் மேனியிலே இன்பம் தரும் பெண்ணமுதே

வண்ணமலர் பூங்கொடியை வண்டு வந்து தேடுதம்மா
எண்ணி எண்ணி நான் மகிழ இன்ப சுகம் பொங்குதம்மா
ல ல  ல ல லா ல லலா ஆ ஆ ஆ

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமையான பாடல் சார்... நன்றி...

கருத்துரையிடுக